சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

பிக்பாஸில் ஒரு நாள் சம்பளத்தை கேட்ட நெஞ்சு வலி வந்துடும் போல.. ரம்யா பாண்டியனுக்கு லைப் டைம் செட்டில்மெண்ட்

சின்னத்திரையில் பிரபலமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளிலும் ஒளிபரப்பாகி மக்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

அந்தவகையில் தற்போது தமிழில் மூன்று பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி, தற்போது 4-வது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் சீசன் 4ல் இறுதிச்சுற்றுக்கு சோம் சேகர், ஆரி, பாலாஜி ஆகியோர் முன்னேறி உள்ளனர்.

இருப்பினும் ஒருவருக்கு மட்டுமே டைட்டில் கிடைக்கும் என்றாலும், ஒவ்வொரு நாட்களுக்கும் பிரபலங்களின் பாப்புலாரிட்டிக்கும், சர்ச்சைக்கும் ஏற்றவாறு சம்பளம் அளிக்கப்படுவதால் போட்டியாளர்களின் ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு முக்கியமானதாக தான் இருக்கும்.

bb4-salary-cinemapettai

எனவே தற்போது வெளியாகி உள்ள பெண் போட்டியாளர்களின் சம்பள பட்டியலை பார்க்கும்போது ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர். ஏனென்றால் இந்த சீசனில் பங்கேற்ற ரேகா, சனம் ஷெட்டி, சுஜித்ரா, அர்ச்சனா, ரம்யா பாண்டியன், கேப்ரில்லா, சிவானி, நிஷா, சம்யுக்தா, அனிதா சம்பத் ஆகிய பத்து பெண் போட்டியாளர்களின் சம்பளப் பட்டியல் இதோ!

  • ரேகா – ரூ. 1,00,000
  • சனம் ஷெட்டி – ரூ. 1,00,000
  • சுஜித்ரா – ரூ. 80,000
  • அர்ச்சனா – ரூ. 75,000
  • ரம்யா பாண்டியன் – ரூ. 75,000
  • கேப்ரில்லா – ரூ. 70,000
  • சிவானி – ரூ. 60,000
  • நிஷா – ரூ. 40,000
  • சம்யுக்தா – ரூ. 40,000
  • அனிதா சம்பத் – ரூ. 40,000

இதில் உன்னித்து பார்க்கும்போது பழம்பெரும் நடிகையான ரேகாவின் சம்பளமும், பெரும் சர்ச்சைக்குரிய நாயகியான சனம் ஷெட்டியின் சம்பளமும் ஒன்றாக உள்ளது.

இப்பதான் புரிகிறது எதனடிப்படையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது. இருப்பினும் இவர்களுடைய சம்பளத்தை பற்றி அறிந்ததும் ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

- Advertisement -

Trending News