கமலுக்கு எதிராக ஹீரோயிசம் காட்டும் அசீம்.. பிக்பாஸ் டைட்டிலுக்கு வர போகும் ஆப்பு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து பல வாரங்கள் கழிந்த நிலையிலும் அது குறித்த சர்ச்சை மட்டும் இன்னும் ஓயவில்லை. எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனின் டைட்டில் வின்னரான அசீமுக்கு எதிராக இப்போது பல கண்டன குரல்கள் ஒழித்து வருகின்றது. அதில் அவருக்கு இந்த டைட்டிலை பெறுவதற்கான தகுதியே இல்லை என்ற கருத்துக்கள் தான் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.

கடந்த ஐந்து சீசன்களிலும் இந்த டைட்டிலை வென்றவர்களை மக்கள் ஆத்மார்த்தமாக ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் இந்த முறை அப்படி கிடையாது. ஏனென்றால் இந்த சீசனின் டைட்டில் வின்னராக விக்ரமன் தான் வருவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். அப்படி இருக்கும்போது அசீமுக்கு இந்த வெற்றி போய் சேர்ந்ததில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்தான்.

Also read: ரஜினி, கமலே பார்த்து மிரண்டு போன நடிகர்.. பணத்தைக் கொட்டிக் கொடுக்க தயாராக இருந்த தயாரிப்பாளர்கள்

அது அவ்வப்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை கிளப்பினாலும் தற்போது அசீமிடம் இருக்கும் இந்த டைட்டில் இப்போது பறிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. ஏனென்றால் அசீம் மீடியா முன் பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவும், ரசிகர்களின் கைதட்டலை பெறுவதற்காகவும் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி ஹீரோயிசம் காட்டிக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் ஒரு சேனலுக்கு இவர் பேட்டி கொடுத்திருந்தார். அதில் அவர் பிக்பாஸ் வீட்டில் கோபமாக பேசுவதை பார்க்கும் அவரின் மகன் என்ன நினைப்பார் என எழுந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்தார். அவர் கூறியிருப்பதாவது, ஏண்டா டேய் என் மகனுடன் நான் பல நேரங்களில் நேரம் செலவழித்து இருக்கிறேன். பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து தான் என்னுடைய மகன் வளர வேண்டும் என்ற அவசியமே இல்லை என காட்டமாக தெரிவித்துள்ளார்.

Also read: டிஆர்பி-யில் தெறிக்க விட்ட டாப் 10 சீரியல்கள்.. அசைக்க முடியாத அசுரனாக மாறிய ஒரே சேனல்

இதுதான் இப்போது கமல் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. ஏனென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்தே அசீம் கோபப்படுவதை பார்த்த கமல் உங்கள் மகன் இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று அறிவுரை கூறி வந்தார். அந்த வகையில் தற்போது அசீம் இப்படி மரியாதை இல்லாமல் பேசி இருப்பது கமலை மனதில் வைத்து தான் என கூறும் ரசிகர்கள் அவருக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் அவருடைய அனுபவத்தில் பாதி கூட உங்களுக்கு கிடையாது என்றும் அவர் கையால் விருது வாங்க உனக்கு என்ன தகுதி இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இந்த பிக் பாஸ் டைட்டில் உங்களுக்கானது கிடையாது, அதை திருப்பி வாங்க வேண்டும் என்ற கமெண்ட்டுகளும் சோசியல் மீடியாவில் பரபரப்பை கிளப்பி வருகிறது. அந்த வகையில் ரசிகர்கள் விஜய் டிவியையும் கழுவி ஊற்றி வருகின்றனர். இப்படி பிக் பாஸ் டைட்டிலுக்கு எதிராக கிளம்பும் இந்த சர்ச்சை எங்கு போய் முடிய போகிறதோ தெரியவில்லை. ஆனால் அசீமுக்கு கிடைத்த இந்த வெற்றி தற்போது அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை.

Also read: அடுத்த சம்பவத்திற்கு தயாராகும் உலகநாயகன்.. மணிரத்னத்திற்கு முன்பே உருவாகும் மாஸ் படம்

- Advertisement -