தளபதி அரசியலில் ஜெயிக்கணும்னு துடிக்கும் முதல் நபர்.. மற்றவரிடம் கேட்டு கேட்டு குதுகலிக்கும் பிரபலம்

political success: இப்பொழுது தளபதி, தமிழக முன்னேற்றக் கழகம் கட்சியின் தலைவர். வருடத்திற்கு 200 முதல் 300 கோடிகள் சம்பாதிக்கும் சினிமாவை விட்டுவிட்டு விஜய் இன்று நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என அரசியலுக்கு வந்து விட்டார்.

கோட் படம் முடிந்த பிறகு இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடிக்க இருப்பதாகவும், அதோடு சினிமாவிற்கு முழுக்கு போட போவதாகவும் தளபதி தெரிவித்து வருகிறார். அதன் பிறகு முழு நேர அரசியலில் இறங்கவும் திட்டம் போட்டு வருகிறார் தளபதி. ஆனால் கோட் படமே விஜய் கேரியரில் கடைசி படமாக இருக்கும் என்றும் கூறி வருகின்றனர்

தமிழக முன்னேற்றக் கழகம் ஆரம்பித்த உடனே பல நல்ல விஷயங்களை செய்து, பல தலைவர்கள் மற்றும் நாட்டு மக்களின் நம்பிக்கையை பெற்று வருகிறார் விஜய். இதுவரை ஆரம்பிக்கப்பட்ட கட்சிகளில் எதுவும் செய்யாத பல சாதனைகளை செய்து வருகிறது தளபதியின் தமிழக முன்னேற்றக் கழகம்.

விஜய் அரசியலுக்கு வந்தது மற்ற கட்சிகளை கலங்க வைத்துள்ளது. ஏற்கனவே இவர் கட்சியை ஆரம்பித்தவுடன் முக்கிய கட்சியில் இருந்து, இவர் கட்சிக்கு பல பேர் ஆதரவு தெரிவித்து இங்கே வந்து இணைந்துள்ளனர். முக்கியமான புள்ளிகள் 500 பேர் டி வி கே கட்சியில் இணைந்துள்ளனர்.

மற்றவரிடம் கேட்டு கேட்டு குதுகலிக்கும் பிரபலம்

எல்லாவற்றிற்கும் மேலாக அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த் வயது மூப்பு காரணமாகவும், உடல் நலிவு காரணமாகவும் அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்து விட்டார்.

ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு தெரிந்த மூத்த அரசியல் பிரமுகளிடமும், பத்திரிகையாளர்களிடமும், விஜய் பற்றி பல விஷயங்களை விசாரிக்கிறார். விஜய் அரசியலுக்கு வந்தால் ஜெயித்து விடுவாரா, அவருடைய எதிர்காலம் எப்படி இருக்கிறது.? அவர் கட்டாயமாக ஜெயிக்க வேண்டும். நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என ஆர்ப்பரித்து சந்தோஷப்பட்டு வருகிறார்.

Next Story

- Advertisement -