இயக்குனர் லிங்குசாமி அதிரடி கைது.. காரணத்தைக் கேட்டு அதிர்ந்து போன தமிழ் சினிமா

மம்முட்டி நடித்த ஆனந்தம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லிங்குசாமி. அவரது இரண்டாவது படம் மாதவனுடன் ரன். அஇவருடைய மிகப்பெரிய ஹிட் படம் என்றால் அது நடிகர் விஷால் நடித்த சண்டக்கோழி.

பிவிபி தயாரிப்பு நிறுவனத்தின் காசோலை மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் 6 மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது.

Also read: மொக்க படத்திற்கு ஓவர் சீன் போட்ட லிங்குசாமி.. இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்

பிவிபி என்ற நிதி நிறுவனத்தின் காசோலை மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் 6 மாத சிறை தண்டனை விதித்திருக்கிறது.. பிவிபி கேபிட்டல் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட ரூ.1.03 கோடி கடன் திருப்பிச் கொடுக்கப்படாததால் இயக்குநர் லிங்குசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதற்கு மிகப்பெரிய காரணம் என்னவென்றால் லிங்குசாமியின் அடுத்தடுத்த தோல்வி படங்களே. உண்மையை சொல்ல போனால் சண்டகோழிக்கு பிறகு லிங்குசாமிக்கு எந்த வெற்றிப்படங்களும் அமையவில்லை.

Also read: சமீபத்தில் வெளியாகி அட்டர் பிளாப் ஆன 5 படங்கள்.. ரீ-என்ட்ரியில் லிங்குசாமிக்கு ஊதிய சங்கு!

விக்ரமின் பீமா, மாதவன்-ஆர்யா நடித்த வேட்டை, விஷாலின் சண்டக்கோழி 2 என அனைத்து படங்களும் அவருக்கு மிகப்பெரிய பிளாப் ஆனது. இந்த படங்கள் ஓடாததால் லிங்குசாமிக்கு நிறைய பணக்கஷ்டம் இருந்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தன

லிங்குசாமி பையா, அஞ்சான் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இப்போது இவருக்கு செக் மோசடி வழக்கில் தண்டனை கிடைத்துள்ளது.

Also read:ஒரே நாளில் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய லிங்குசாமி.. இதெல்லாம் உங்களுக்கு ஓவர் நக்கலா இல்லையா