ஒரே நாளில் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய லிங்குசாமி.. இதெல்லாம் உங்களுக்கு ஓவர் நக்கலா இல்லையா

பல வெற்றி படங்களை கொடுத்த லிங்குசாமி மிகப்பெரிய பிரேக் எடுத்து மீண்டும் தி வாரியர் என்ற படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். ரன், சண்டக்கோழி என லிங்குசாமி இயக்கத்தில் வெளியான படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது லிங்குசாமி இயக்கியுள்ள தி வாரியர் படத்தில் தெலுங்கு நடிகர் ராம் போத்தினேனி மற்றும் கீர்த்தி ஷெட்டி இணைந்து நடித்திருந்தனர்.

மேலும் ஆதி, நதியா, ரெடிங் கிங்ஸ்லி போன்றோரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இப்படம் ஜூன் 14ஆம் தேதி வெளியானது. இப்படம் வெளியாவதற்கு முன்பாகவே இப்படத்தில் சிம்பு பாடிய புல்லட்டு பாடல் ரசிகர்கள் மத்தியில் ட்ரண்டானது.

இந்த புல்லட் பாடலுக்காகவே ரசிகர்கள் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் திரையரங்குக்கு வந்தனர். ஆனால் படம் வெளியாகி நேர் மற்றும் எதிர் என கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படத்தில் நிறைய பஞ்ச் டயலாக்குகள் இடம் பெற்றிருந்ததாகவும் சாமி, சிங்கம் போன்ற அதே போலீஸ் கதையின் சாயலில் இருந்ததாக விமர்சனங்கள் வந்தது.

மேலும் இப்படத்தில் தேவிஸ்ரீபிரசாத்தின் இசை பெரிய அளவில் ஈர்க்கப்படவில்லை என கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று படக்குழு தி வாரியர் சக்சஸ் பார்ட்டி கொண்டாடி உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ஆதி, ராம், லிங்குசாமி, கீர்த்தி ஷெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பலராலும் பகிரப்பட்டு வருகிறது. மேலும் படம் வெளியான ஒரே நாளில் இவ்வாறு சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடுவதற்கு ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

படம் வெளியாகி ஒரு மாதம் அல்லது குறைந்தபட்சம் ஒரு வாரமாவது திரையரங்குகளில் ஓடினால் தான் படத்தின் வெற்றியை கணிக்க முடியும். ஒரேநாளில் லிங்குசாமி தி வாரியர் படம் வெற்றி ஆனதாக நினைத்து விழா கொண்டாடியுள்ளார். இதனை பார்த்த பலரும் இதெல்லாம் உங்களுக்கு ஓவரா நக்கலா இல்லையா என கிண்டல் செய்து வருகின்றனர்.