புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

கஜானாவை நிரப்ப ரெடியான ஐந்து 2ஆம் பாகம் படங்கள்.. முழு மூச்சை கொடுத்து உழைக்கும் உதயநிதி

List of Part 2 Tamil Movies: சில படங்கள் வெற்றி படமாக வெளிவந்த நிலையில் இதன் அடுத்த பாகம் எப்பொழுது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியன் 2: சங்கரின் இயக்கத்தில் பல வருடங்களுக்கு முன் வெளிவந்த இந்தியன் திரைப்படம்  தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதன் இரண்டாவது பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் கேட்க இப்போது வந்துவிட்டது இந்தியன் 2. பல பிரச்சனைகள் பல சர்ச்சைகளுக்கு பின் “வணக்கம் India. Indian is back” என்று கம் பேக் கொடுக்க வருகிறார் கமல்

கைதி 2: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த கைதி தமிழ் சினிமாவில் புதிய முயற்சியில் புதிய கதைக்களத்தில் எடுக்கப்பட்ட வெற்றி திரைப்படம் ஆகும். படத்தின் முடிவிலே நாயகனின் முன் கதையை  பற்றி கைதி 2  வருவதற்கான செய்தியை வைத்தார் இயக்குனர். அனைவரும் எதிர்பார்த்து இருந்த நிலையில் தலைவர்171 படம் முடிந்த கையோடு கைதி 2 ஆரம்பிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Also read: தமிழக அரசு வெளியிட்ட 2024-ன் பொது விடுமுறை பட்டியல்.. உச்சி குளிர வைத்த ஜனவரி மாதம்

டிமான்டி காலனி 2: நகைச்சுவை வசனங்களுடன் மிகை பட்ட திரில்லரை கலந்து வெளிவந்த டிமான்டி காலனி சத்தம் இல்லாமல் பெரிய வெற்றியை பெற்றது. ரசிகர்கள் ஆவலை பூர்த்தி செய்யும்  வகையில் டிமான்டிகாலனி 2 படப்பிடிப்பு முடிக்கப்பட்டு கிராபிக்ஸ் வேலைகள் நடைபெற்று வரும் வேளையில் அடுத்த வருட தொடக்கத்தில் படம் வெளியாக உள்ளது. அருள்நிதிக்காக உதயநிதி நிச்சயமாக இந்த படத்தை கொஞ்சம் மெருகேற்றி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

விடுதலை 2: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தின் சூரி,விஜய் சேதுபதி, கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளிவந்த விடுதலை சிறப்பான விமர்சனங்கள் பெற்றதே தொடர்ந்து விடுதலை 2 வேகமாக ரெடியாகி வருகிறது. இப்படம் விஜய் சேதுபதி மற்றும் அவரது மனைவியாக வரும் மஞ்சுவாரியரின் கடந்த காலத்தை பிரதிபலிப்பதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புஷ்பா 2: ஏப்ரல் மாதம் புஷ்பா 2 டிரைலர் வெளியானதிலிருந்தே ரசிகர்கள் எப்போது திரைக்கு வரும் என ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள். தென் மாநிலங்களை தவிர்த்து வடமாநிலங்களிலும் புஷ்பா வசூலில் சக்கை  போடு போட்டது.  கதையின் விறுவிறுப்புக்கும் நாயகனின் புரட்சிகரமான நடிப்பிற்கும் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கி இருந்த வேளையில் புஷ்பா 2024 ஆகஸ்ட் மாதம்  திரைக்கு வரும் என தகவல்கள்  வெளிவந்து உள்ளது.

Also read: லலித் டார்ச்சர், லியோ காட்டிய பயம்.. லோகேஷ்க்கு ரஜினி கொடுத்த அட்வைஸ், தள்ளிப்போகுமா தலைவர்-171.?

- Advertisement -

Trending News