கமலின் விக்ரம் படத்துக்கு போட்டியாக பெரிய பட்ஜெட் படம்.. அசால்டாக அடிக்கப்போகும் ஆண்டவர்

கமல் அரசியலில் கவனம் செலுத்தி வந்ததால் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக அவருடைய படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் இப்படம் கண்டிப்பாக வசூல் சாதனை படைக்கும் என கமல் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இப்படத்திற்கு போட்டியாக ஒரு மெகா பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஹிந்தி படம் ஜூன் 3 ஆம் தேதி வெளியாக உள்ளது. யாஷ் ராஜ் தயாரிப்பில் சந்திர பிரகாஷ் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் பிரித்திவிராஜ்.

இப்படம் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரித்விராஜ் சவுகான் என்ற மன்னனின் வரலாற்று கதையை மையமாக வைத்து பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இப்படமும் பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகியுள்ளது.

பாகுபலி ரேஞ்சுக்கு இப்படம் உருவாகி உள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பாகுபலி படம் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து இன்னும் மக்களால் வெளிவர முடியவில்லை. இப்படமும் பாகுபலி போன்றே இருக்கும் என கூறப்படுகிறது.இதனால் விக்ரம் படம் தமிழ்நாட்டை தவிர ஆந்திரா, கர்நாடகா போன்ற பகுதிகளில் டல் அடிக்கும் என கூறப்படுகிறது.

ஆனால் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் விக்ரம் படத்தில் ஏதோ மிகப்பெரிய சம்பவம் செய்துள்ளனர். அது இப்படத்தின் ட்ரெய்லரிலே தெரிகிறது. இதனால் எந்த படம் வந்தாலும் விக்ரம் படம் முன் வேலைக்காகாது. கமலஹாசன் அசால்டாக வசூலில் வேட்டையாட போகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்