வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பிக்பாஸில் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பிருக்கும் நபர்.. இவருக்கே ரசிகர்களின் ஆதரவு!

விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் பவானி ரெட்டி, அபிஷேக், சின்னப்பொண்ணு, தாமரைச்செல்வி, அக்ஷரா, அபினய், பிரியங்கா, ஐக்கிபெர்ரி, இசைவாணி ஆகிய 9 போட்டியாளர்கள் உள்ளனர். இதில் யாருக்கு மக்களின் ஆதரவு அதிகமாக இருக்கிறது என்பதை வைத்துதான் இந்த வார எலிமினேஷன் நடைபெறும். அந்த வகையில் இவர்களில் சின்னப்பொண்ணு மற்றும் அபிஷேக் ஆகியோர் சென்ற சென்ற வாரமே தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதிவரை சென்றார்கள்.

அதனைத் தொடர்ந்து இந்த வாரமும் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்கள். தற்போது இந்த வாரம் யாரெல்லாம் எலிமினேட் ஆக மாட்டார்கள் என்று மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது என்றால் முதலில் பிரியங்கா. இவர்கள் விஜய் டிவியின் ஒரு முக்கியமான ஆங்கர் என்பதினால் இந்த வாரம் அவர்கள் எலிமினேட் ஆவதற்கு அதிக வாய்ப்பு இல்லை.

அடுத்ததாக, சின்னத்தம்பி எனும் சீரியலின் மூலம் மக்களிடையே நல்ல பிரபலமானவர் பவானி ரெட்டி. இவர் டாஸ்க் ஒன்றில் சொன்ன இவரது வாழ்க்கை கதையின் தாக்கமே இன்னும் மக்களிடம் குறையவில்லை என்றும் தற்போது அபினய் தன்னை காதலிக்கிறாரா என்பது போன்ற காதல் சமாச்சாரத்தை உருவாகி வருவதால் இவரும் இந்த வாரம் எலிமினேடாக வாய்ப்பு இல்லை என்று ரசிகர்களால் கூறப்படுகிறது.

இந்த வரிசையில் அபினய், இவர் போட்டியில் சற்று துருதுருவாக இருப்பதினாலும், அனைத்து போட்டியாளர்களிடமும் பிரெண்ட்லியாக பழகுவதாலும் அத்துடன் இவர் பவானி ரெட்டியின் வலையில் சிக்குவாரா மாட்டாரா என்பது போன்ற பல கேள்விகள் இருப்பதால் இவரும் இந்த வாரம் எலிமினேட் ஆக மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

cinnaponnu-cinemapettai
cinnaponnu-cinemapettai

சற்று கடுப்பைக் கழப்பினாலும் அபிஷேக் இல்லை என்றால் பிக்பாஸ் போரடிக்கும் என்ற அளவிற்கு பிக்பாஸ் கேமராவால் பெரும்பாலும் காண்பிக்கபடுபவர் அபிஷேக். இவர் சற்று குறைவாக மக்களின் ஓட்டுகளைப் பெற்று இருந்தாலும் இவரை வைத்துதான் டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றிக்கொள்ள வேண்டும் என்று பிக்பாஸ் குழு முடிவெடுத்துள்ளது அப்பட்டமாக தெரிய வருவதால், இவர் இந்த வாரம் நாமினேட் ஆவதற்கு அதிக வாய்ப்பு இல்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது.

thamarai-selvi-bb5-cinemapettai
thamarai-selvi-bb5-cinemapettai

ஆகையால் தற்போது பிரச்சனையில் இருப்பது தாமரைச்செல்வி மற்றும் சின்னப்பொண்ணு. மேலும் இந்த வாரம் யார் எலிமினேட் ஆகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். பிக் பாஸ் இப்போது தான் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்குள் ஆயிரம் டிவிஸ்ட் அண்ட் டர்ன். அப்படி இருக்கும்போது பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு மக்களின் மத்தியில் எப்படி வரவேற்பு கிடைத்து கொண்டு இருக்கிறது என்பதை வாக்கின் அடிப்படையில் தெரிய வருகிறது.

- Advertisement -

Trending News