பிக் பாஸ் அல்டிமேட் டைட்டில் வின்னர் இவர்தான்.. முதல் நாளிலே வெளிவந்த டாப் 5 பைனலிஸ்ட்!

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது நிறைவடைந்து இரண்டு வாரம் மட்டுமே ஆன நிலையில் மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் என்டர்டெயின்மென்ட் செய்யவுள்ளது. ஆகையால் நேற்று துவங்கப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 70 நாட்கள் நடைபெற உள்ளதால் இதில் கடந்த ஐந்து சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர் மீண்டும் இதில் என்ன செய்யப் போகின்றனர் என்பதை இனி வரும் நாட்களில் தெரியவரும்.

இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். மேலும் இதன் ஒரு மணி நேர ஒளிபரப்பு விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்ப உள்ளது. முதல் நாளான நேற்று உலகநாயகன் கமலஹாசன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 14 போட்டியாளர்களை மீண்டும் அறிமுகம் செய்து ஒவ்வொருவருக்கும் ஒரு மளிகை பொருளை கொடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி விட்டார்.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் ஆளாக வனிதா தேன் பாட்டிலுடன் உள்ளே நுழைந்தார். அதைத்தொடர்ந்து நிரூப் மிளகுடன் உள்ளே சென்றார். மூன்றாவது ஆளாக ஜூலி வெங்காயத்துடன், நான்காவது ஆள் அபிராமி மஞ்சள் உடனும், இவர்களைத் தொடர்ந்து தாமரை அரிசி உடனும், தாடி பாலாஜி முருங்கைக்காய் உடனும், அனிதா பால் உடனும், சுஜா பூண்டு உடனும், சுரேஷ் சக்கரவர்த்தி உப்புடன், அபிநய் நெய் உடனும், சினேகன் வாழைக்காய் உடனும் இவர்களுடன் பாலாஜி முருகதாஸ், ஷாரிக், சுருதி உள்ளிட்ட 14 போட்டியாளர்கள் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் உள்ளே நுழைந்துள்ளனர்.

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் நடைபெற்ற காயின் டாஸ்க் போலவே கமலஹாசன் பிக்பாஸ் அல்டிமேடின் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் மளிகை பொருளை வைத்து ஏதாவது ஒரு விருவிருப்பான டாஸ்க் நடைபெற உள்ளது.

அத்துடன் ஆரம்பித்த முதல் நாளிலேயே இந்த நிகழ்ச்சியின் டாப் 5 பைனல் லிஸ்ட் ஆக நிரூப், வனிதா, அனிதா, தாமரைச்செல்வி, பாலாஜி முருகதாஸ் ஆகியோர் இருப்பார்கள் என்றும், இவர்களும் பாலாஜி முருகதாஸ் வெற்றியாளராகவும் தாமரைச்செல்வி ரன்னர் அப் ஆகவும் இருப்பார் என்று ரசிகர்கள் கணித்து விட்டனர்.

கடந்த பிக்பாஸ் சீசன்4 நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை பெற்ற பாலாஜி முருகதாஸ் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆக வேண்டும் என்ற வெறியுடன் ரசிகர்களுக்கு சுவாரசியம் மிகுந்த போட்டியாளராக இந்த நிகழ்ச்சியில் விளையாடுவார் என்று ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்