எலிமினேஷனில் இருந்து தப்பித்த நிரூப்.. இந்த வாரம் வசமாக சிக்கிய பச்சோந்தி யார் தெரியுமா.?

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. எனவே இன்னும் ஒரே வாரத்தில் நிகழ்ச்சி நிறைவடைய உள்ளதால் போட்டிகளும் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. இந்நிலையில் நாமினேஷன் லிஸ்டில் இருந்த நிரூப் எதிர்பாராத விதமாய் இரண்டாவது பைனல் லிஸ்ட் ஆனார்.

எனவே மக்கள் ஓட்டில் குறைந்த வாக்குகளை பெற்று இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் நபராக இருந்த நிரூப் அதிர்ஷ்டவசமாக தப்பித்துவிட்டார். ஆகையால் அவருக்கு அடுத்த படியாக இருக்கும் பாவனி மற்றும் தாமரை செல்வி இருவரும் தற்போது டேஞ்சர் சோனில் உள்ளனர்.

அத்துடன் நேற்று நடைபெற்ற டாஸ்கில் பவானிக்கு இரண்டாவது பைனல் லிஸ்ட் ஆகும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவருக்கு மற்ற போட்டியாளர்கள் சொல்ல காரணம் பிக்பாஸில் ஏற்றுக் கொள்ள முடியாததால், பவானி இரண்டாவது பைனல் லிஸ்ட் ஆக முடியவில்லை. அதன் பிறகு நிரூப் அந்த வாய்ப்பை பெற்றுவிட்டார்.

இந்நிலையில் நாமினேஷனில் இருக்கும் பாவனி மற்றும் தாமரை செல்விக்கு இடையே மிகக் குறைந்த ஓட்டு வித்தியாசம் இருப்பதால், யார் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகின்றனர் என்பதை கணிப்பதற்கு சிரமமாக உள்ளது. தேவைக்கு ஏற்றவாறு பச்சோந்தி போல் மாறும் பாவணி இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளதாக பிக்பாஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே போல் தாமரையை விட பாவனி பிக்பாஸ் வீட்டில் சுவாரசியம் குறைந்த நபராக இருப்பதால், அவரை இந்த வாரம் வெளியேறுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. இருப்பினும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் பாவனிக்கு என்று தனி ஆர்மி உருவாகி உள்ளது.

அவர்களது முழு சப்போர்ட் பவானிக்கு இருப்பதால் தாமரை மற்றும் பாவனி இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. எனவே இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் நபர் யார் என்பதை நாளை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் தெரிய வரும். அதனை பொறுத்திருந்து பார்ப்போம்.