பிக் பாஸ் சீசன் 5 இல் முதல் வாரம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. போட்டியாளர்களிடம் உலகநாயகன் கமலஹாசன் உரையாற்றியதை சனி மற்றும் ஞாயிறு நாட்களில் ஒளிபரப்பினர். அப்போது ஓவர்கான்பிடன்ஸ் ஆக பதிலளித்த பிரியங்காவை அனைத்து நெட்டிசன்களும் கலாய்த்து வருகின்றனர்.
பிக் பாஸ் வீட்டில் எலிமினேஷன் ரவுண்ட் இதுவரையிலும் தொடங்கவில்லை. இந்நிலையில் உலக நாயகன் கமலஹாசன் போட்டியாளர்கள் இடம், இனிதான் வீட்டிற்குள் உரசல்களும், சலசலப்புகள் நிகழும் என்று எச்சரிக்கை விடுத்தார். யார் யாருடன் வேண்டுமானாலும் மோதிக் கொள்வீர்கள் என்றும் கூறினார்.
இதற்கு ஆங்கர் பிரியங்கா, பிக்பாஸ் வீட்டில் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம் என்று பதிலளித்தார். அதற்கு கமலஹாசன் பார்ப்போம் என்று கூறி நகைத்தார். ஓவர் கான்ஃபிடன்ஸ் ஒடம்புக்கு ஆகாது என்று ரசிகர்களும், ஆங்கர் அர்ச்சனாவை போல் அன்பு கூட்டணி அமைக்க போகிறாயா பிரியங்கா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
ஏனென்றால் கடந்த சீசனில் அர்ச்சனாவுடன் ரியோ, நிஷா பக்கபலமாக இருந்தது போல இந்த சீசனிலும் பிரியங்காவுடன் தாமரை செல்வி, அபிஷேக் உள்ளிட்டோர் பக்கபலமாக நின்று அன்பு கூட்டணியை இந்த சீசனிலும் உருவாக்கியுள்ளனர்.
மேலும் பிக்பாஸ் வீட்டிற்குள் டிஆர்பி ரேட்டிங்காக போட்டியாளர்களுக்கு மத்தியில் பிக்பாஸ் கொலுத்திப் போடும் வெடிகளை பற்றி அறியாமல் பிரியங்கா பேசி சக போட்டியாளர்களை தன்வசம் தீர்த்துக் கொண்டிருக்கிறார். இதேபோன்றுதான் முந்தைய சீசனில் ஆங்கர் அச்சும்மா செய்த தவறை செய்ய வேண்டாம் என ரசிகர்கள் பிரியங்காவை வலியுறுத்தி வருகின்றனர்.
அத்துடன் பிரியங்கா தானாக முன்வந்து வாயை கொடுத்து மாட்டிக் கொண்டதால், பிக்பாஸின் அடுத்த டார்கெட் ஆக மாறிவிட்டார் என்று நெட்டிசன்கள் எதிர்பார்க்கின்றனர். இனிவரும் எபிசோடுகள் ஆங்கர் பிரியங்காவை மையமாக கொண்டு நகர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.