முக்கிய போட்டியாளரை தூக்க துடிக்கும் ரசிகர்கள்.. ஓட்டிங் பார்த்து விழி பிதுங்கிய பிக்பாஸ்

பொதுவாகவே ரியாலிட்டி நிகழ்ச்சி என்றாலே வெற்றியாளரை மக்கள்தான் தேர்ந்தெடுப்பர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன்5  நிகழ்ச்சியில் தற்போது நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு மக்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த வாக்கு பதிவுகளின் அடிப்படையில் நாடியா குறைவான வாக்கினை பெற்றிருந்ததால் கடந்த வாரம் எலிமினேஷன் ரவுண்டில் முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து இரண்டாவது எலிமினேஷன் ரவுண்டு வரும் ஞாயிற்றுக்கிழமை அரங்கேற உள்ளது.

இந்நிலையில் மக்கள் தங்களின் வாக்குகளை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். ஆரம்பத்திலிருந்தே ஆங்கர் பிரியங்கா மக்கள் வாக்கில் முதலிடத்தை பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து பவானி ரெட்டி இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து அக்சரா, தாமரை, இசைவாணி, ஐக்கி பெர்ரி அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். இந்த வரிசையில், அபினய், சின்னப்பொண்ணு, அபிஷேக் ஆகியோர் கடைசி மூன்று இடத்தை பிடித்து வாக்குப்பதிவில் மிகவும் பின் தங்கி உள்ளார்.

bb5-vote-cinemapettai
bb5-vote-cinemapettai

எனவே இவர்களுள் ஒருவர் தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போவதாக வாக்கின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது. அதிலும் குறிப்பாக கடைசி இடத்தைப் பிடித்த அபிஷேக் மிகக் குறைந்த வாக்கை பெற்றுள்ளதால் அவரே இந்த வாரம் எலிமினேட் ஆக அதிக வாய்ப்பிருக்கிறது.

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது கண்டெண்ட் கொடுக்கும் ஒரே கன்டஸ்டன்ட் அபிஷேக் என்பதால், அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினால் நிகழ்ச்சி சுவாரசியம் குறைந்துவிடும் என்பதால் விஜய் டிவி விழிபிதுங்கி நிற்கிறது. இருப்பினும் கடைசி நிமிடம் ஏதாவது மாற்றம் நிகழலாம். எனவே வரும் ஞாயிற்றுக்கிழமை யார் எலிமினேட் ஆக போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்