பிக்பாஸில் எதிர்பார்ப்பை எகிற வைத்த முதல் டைரக்ட் பைனலிஸ்ட்.. பாலாவையே தூக்கி சாப்பிட்டாரே!

சின்னத்திரையில் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 4. இந்த நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளதால் இந்நிகழ்ச்சியில் யார் ஜெயிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே அதிகளவில் காணப்படுகிறது.

எனவே இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை கூட்டும் வகையில், தற்போது பிக்பாஸ் சீசன்-4ன் டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த டாஸ்க்கில் அதிக மதிப்பெண்களை பெற்று முதலிடம் பிடிக்கும் நபர் டிக்கெட்டை வென்று நேரடியாக இறுதி வாரத்திற்குள் நுழைவார்.

bigg-boss-4-vijay-tv

அதேபோல், குறைவான மதிப்பெண் பெற்றிருப்பவர் வீட்டை விட்டு வெளியேற்றபடுவார். இந்நிலையில் ரியோ தான் இந்த டிக்கெட் பினாலே டாஸ்க்-இல் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு செல்வார் என்று எதிர்பார்த்த சூழலில்,

தற்போது புது திருப்பமாக சோம் சேகர் அந்த வாய்ப்பை தட்டி சென்றுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இவ்வளவு நாள் அமைதியாக இருந்த சோம் சேகர், தற்போது நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் தனது முழு முயற்சியை அளித்தது மட்டுமல்லாமல்,

som-sekar-cinemapettai

அனைவரையும் பின்னுக்குத்தள்ளி பிக் பாஸ் சீசன்-4இன் இறுதிச்சுற்றுக்கு முதல் நபராக முன்னேறி உள்ளார். இதில் இருந்து பார்க்கும்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில்,

‘ஊம்ம கொட்டனும், மிச்சர் தின்னுறவங்க தான் டைட்டில் வின்னர் ஆக இருப்பார்கள்’ என்று பரவலாக பேசப்படுவது, இந்த சீசனிலும் உண்மை ஆகுவதற்கு வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்