செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

ரம்யா பாண்டியனுக்கு வக்காலத்து வாங்கிய அனிதா சம்பத்.. சுத்தி விட்டு வேடிக்கை காட்டும் ரசிகர்கள்

விஜய் டிவியில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆக நடிகர் ஆரி தேர்வு செய்யப்பட்டார். இரண்டாவது இடம் பாலாஜி முருகதாஸ்-க்கும், மூன்றாவது இடம் ரியோவுக்கும் கிடைத்தது.

இருப்பினும் இந்த சீசன் முடிந்து வெளியே வந்த நடிகை ரம்யா பாண்டியனுக்கு ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனம் எழுத்து தொடங்கியது. இதேபோல்தான் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது நடிகர் ஆரி பற்றி விமர்சித்ததை குறித்து ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்திற்கு ஆளானார்.

அதன் பின்பு மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றபோது அனிதா, பார்வையாளர்களிடம் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது. எனவே தற்போது ரம்யாவையும் விளாசி வரும் நடிகர் ஆரியின் ரசிகர்களுக்கு ரம்யா, ‘பிக் பாஸ் சீசன்4 நிகழ்ச்சி முடிந்துவிட்டது.

இருப்பினும் போட்டியாளர்களை குறித்து தவறாக விமர்சிக்க வேண்டாம். நம்முடைய கடமை எல்லாம் அனைத்து பெண்களையும் மதிக்க வேண்டும். எனவே இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்’ என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவிற்கு அனிதா சம்பத், ‘பிக்பாஸ் பார்வையாளர்கள், பெண் போட்டியாளர்களையும் அவரது அவர்களது குடும்பத்தைப் பற்றி எந்த எதிர்மறையான கமெண்ட்களையும் பதிவிடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.

மேலும் நீங்கள் ஒரு மெசேஜ் போட்டு விட்டு உங்கள் வேலையைப் போய்ப் பார்த்து விட்டீர்கள். ஆனால் அதை படிப்பவர்களின் மனதில் ஆழமாகப் பதித்தால் மன அழுத்தமும் ஏற்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்றும் ‘குக் வித் கோமாளி’ அல்ல.

anitha-stories-1
anitha-stories-1

அதனை விளையாட்டாக மட்டுமே பாருங்கள். எனவே பிக்பாஸில் கலந்து கொண்ட போட்டியாளர்களை நிம்மதியாக வாழ விடுங்கள்’ என்றும் ரம்யாவின் பதிவிற்கு சப்போர்ட்டாக அனிதா பதிவிட்டிருக்கிறார். இப்படி பிக்பாஸ் பார்வையாளர்களுக்கும் சீசன்4 போட்டியாளர்களுக்கும் இடையே சமூக வலைதளங்களில் காரசாரமான விவாதம் தற்போது நிகழ்ந்து வருகிறது.

- Advertisement -

Trending News