வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

விஜய்க்கு சுறான்னா, ஜெயம் ரவிக்கு பூமி.. பங்கமாக கலாய்த்த ரசிகருக்கு இயக்குனர் கொடுத்த பதிலடியை பாருங்க!

விஜய் தன்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத படம் என்றால் அது சுறா தான். அனைத்து நடிகர்களும் தங்களுடைய 25, 50, 100 வது படங்களில் மிக கவனத்துடன் கதைகளை தேர்வு செய்து நடித்து மிகப்பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருப்பார்கள்.

ஆனால் தளபதி விஜய்க்கு அப்படியே இது தலைகீழாக நடந்தது. சுறா என்ற படு மொக்கையான படத்தை தனது 50வது படமாக கொடுத்தார். மேலும் விஜய் சினிமாவை விலக விட்டு விலக நேரம் வந்துவிட்டது என பல பத்திரிகைகளில் பகிரங்கமாக தெரிவித்தனர்.

அதேபோல்தான் தற்போது ஜெயம் ரவியின் 25வது படமான பூமி படமும் இருக்கிறது என தொடர்ந்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். சீரியலை விட மோசமாக உருவாகியுள்ளது பூமி திரைப்படம். கதைக்கரு சரியாக இருந்தாலும் காட்சிகள் ரசிகர்கள் ரசிக்கும் படி அமையாததே இந்த படத்தின் தோல்விக்குக் காரணம்.

இதுகுறித்து ரசிகர் ஒருவர் ஜெயம் ரவிக்கு ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் சுறா, ஆழ்வார், அஞ்சான், ராஜபாட்டை போன்ற வரிசையில் பூமி படத்தையும் இணைத்து விடுங்கள் எனவும், தயவுசெய்து லக்ஷ்மன் உடன் இனி படம் செய்ய வேண்டாம் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

இதனை கவனித்த பூமி பட இயக்குனர் லக்ஷ்மன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அந்த ரசிகருக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில், பூமி படம் எதிர்கால சந்ததியினர் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக எடுத்ததாகவும், ரோமியோ ஜூலியட் போன்ற கமர்ஷியல் படங்களை எடுத்த எனக்கு அதே மாதிரி படங்கள் எடுக்கத் தெரியாது எனவும் கூறியுள்ளார்.

bhoomi-director-tweet
bhoomi-director-tweet

மேலும் இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என கூறியுள்ளார். முன்னதாக லட்சுமன் ஜெயம் ரவி கூட்டணியில் வெளியான ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News