பவதாரணியின் குரல், மொத்தமாக நொறுங்கி போன யுவன்.. விஜய் பிறந்தநாளுக்கு போட்ட ட்விட்

Yuvan Sankar Raja: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள GOAT படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் வழக்கம்போல் படம் ரிலீஸ் ஆவதற்கு முன் ஒவ்வொரு பாடல்களை வெளியிட்டு ரசிகர்களிடமிருந்து மிகப்பெரிய ஹைப்பை உருவாக்கி விட்டார்கள். அந்த வகையில் கொஞ்சம் மாதங்களுக்கு முன் வெளியான கோட் படத்தின் முதல் சிங்கிள் பாடலான விசில் போடு பாடல் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதனைத் தொடர்ந்து நேற்று விஜய்யின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு இரண்டாவது சிங்கிள்ஸ் பாடலாக ஒரு மெலடி பாடலை வெளியிட்டு இருந்தார்கள். இந்த பாடலை விஜய் அவருடைய சொந்த குரலில் பாடியுள்ளார். இவருடன் சேர்ந்து மறைந்த பாடகி பவதாரணி பாடியுள்ளார். ஆனால் AI தொழில்நுட்பத்துடன் அவருடைய குரலை கொண்டு வந்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

நெகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்து கொண்ட யுவன்

அதாவது பெங்களூரில் வைத்து இந்த பாடலை இசையமைத்த போது வெங்கட் பிரபுக்கும் யுவனுக்கும் பவதாரணி பாடினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியிருக்கிறது. அப்பொழுது பவதாரணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் அவர் பூரண குணமடைந்து திரும்பியதும் இந்த பாடலை ரெக்கார்ட் செய்து கொள்ளலாம் என்று இவர்கள் இருவரும் முடிவு செய்து வைத்திருந்திருக்கிறார்கள்.

ஆனால் யோசித்த கொஞ்ச மணி நேரத்திலேயே பவதாரணி மறைந்து விட்ட செய்தி வந்துவிட்டது. இதனால் பல சூழ்நிலைகளை தாண்டிய பிறகு நினைத்தபடி அவரை வைத்து இந்த பாடலைக் கொண்டு வர வேண்டும் என்று AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளோம். ஆனால் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை வரும் என்று கொஞ்சம் கூட நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை.

தற்போது இந்த குரலை கேட்கும் பொழுது ரொம்பவே மனம் நொந்து போய்விட்டது. இருந்தாலும் பவதாரணி குரல் கேட்கும் பொழுது ஒரு இணை புரியாத சந்தோஷம் ஏற்படுகிறது. இதுதான் கஷ்டத்திலும் ஒரு சந்தோசம் என்று சொல்வார்கள் போல என யுவன் மனம் உடைந்து ஒரு நெகிழ்ச்சியான பதிவை நேற்று விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு பதிவு பண்ணி இருக்கிறார்.

மேலும் இந்தப் பாடலை கேட்டு அனைவருக்கும் ஒரு நெகிழ்ச்சியான தருணமாக தான் அமைகிறது. காரணம் ஒரு மெலடி பாடலில் விஜய் பாடியதும் அவருடன் சேர்ந்து பவதாரணி குரலை கேட்கும் பொழுது ஒரு சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது என்று இப்படலுக்கு ஒரு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கிறது. இதனை தொடர்ந்து இன்னும் இப்படத்தின் மீதான ஹைப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் படம் எந்த அளவிற்கு ரசிகர்களை குஷிபடுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

கோட் படத்தின் சுவாரசியமான தகவல்கள்

Next Story

- Advertisement -