லிவிங் டுகெதரில் வாழ முடிவெடுத்த பாரதி.. இந்த அவமானம் உங்களுக்கு தேவையா வெண்பா!

விஜய் டிவியின் பிரைன் டைம் சீரியல் ஆன பாரதிகண்ணம்மா சீரியலில் தற்போது அடுத்தடுத்த திருப்பம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. கண்ணம்மாவிடமிருந்து விவாகரத்துப் பெறுவதற்காக ஆறு மாதம் சேர்ந்து வாழவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவை மீறி இருவரும் மீண்டும் சண்டை போட்டுக்கொண்டு தனித் தனியாக அவரவர் வீட்டில் இருக்கின்றனர்.

இந்த சமயத்தை சாதகமாக பயன்படுத்திய வெண்பா தற்கொலை செய்துகொள்ள போவதாக நாடகமாடி பாரதியை தன் வலையில் விழ வைத்துள்ளார். அத்துடன் பாரதியும் வெண்பாவின் வீட்டில் தங்க முடிவெடுத்து ஹேமாவை அழைத்துக்கொண்டு பெட்டியை கட்டிக் கொண்டு கிளம்புகிறார்.

இதனால் உச்சகட்ட சந்தோஷத்தில் இருக்கும் வெண்பா, வீட்டு வேலைக்காரி சாந்தி இடம் ‘பாரதியும் நானும் ஆறு மாத காலம் லிவிங் டுகெதர் அதாவது திருமணம் செய்து கொள்ளாமல் கணவன் மனைவியாக வாழப்போகிறோம்’ என்று சந்தோஷத்துடன் கூறிக் கொண்டிருக்கிறார். அதன் பிறகு வீட்டிற்கு வரும் பாரதி மற்றும் ஹேமா இருவரையும் வரவேற்கும் வெண்பா, ஹேமாவிடம் தன்னை டாக்டரம்மா என்று அழைக்கும்படி கூறுகிறார்.

ஆனால் ஹேமா, ‘சமையல் அம்மா என்று சொல்லும் போது எவ்வளவு அழகா இருக்கு. ஆனா டாக்டரம்மா என்று சொல்லும்போது நல்லாவே இல்லை. அதுமட்டுமின்றி நீங்கள்தான் டாக்டரே இல்லை. உங்களை டாக்டர் வேலை பார்க்கக்கூடாது என்று கோர்ட்டு சொல்லியிருக்கிறார்களே!’ என்று ஹேமா வெண்பாவிற்கு செம பல்பு கொடுத்து விட்டார்.

அத்துடன் கல்யாணம் ஆகாத பொண்ணுடன், ஆண் நண்பர் ஒருவர் தங்குவதை அறிந்த வெண்பாவின் பிளாட் இன்சார்ஜஸ், பாரதி-வெண்பா இருவரும் சேர்ந்து இருக்கக்கூடாது. ஏனென்றால் இந்த பிளாட்டில் இருப்பவர்களுக்கு என்றே ஒரு கலாச்சாரம் இருக்கிறது என்று பாரதியை வெண்பாவுடன் தங்கக் கூடாது என்று கூறுகின்றனர்.

இதனால் கடுப்பான வெண்பா அவர்களை கோபத்தில் திட்டி தீர்க்கிறார். இருப்பினும் அவமானம் தாங்காமல் பாரதி, வெண்பா வீட்டிலிருந்து ஹேமாவை அழைத்துக் கொண்டு மீண்டும் சௌந்தர்யா வீட்டிற்கு வந்துவிடுகிறார். இவ்வாறு வெண்பா வீட்டிற்கு பொட்டியுடன் கிளம்பிய பாரதியை மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு சௌந்தர்யா மற்றும் கண்ணம்மா இருவரும் பிளான் போட்டு வர வைத்துவிட்டனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்