கிளைமேக்ஸை நோக்கி பாரதி கண்ணம்மா.. கடைசி நேரத்தில் எதிர்பாராத ட்விஸ்ட்

விஜய் டிவியில் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் பாரதி கண்ணம்மா. தற்போது இத்தொடர் கிளைமாக்ஸ் நோக்கி விறுவிறுப்பான கதை களத்துடன் சென்று கொண்டிருக்கிறது. அதாவது வெண்பாவிற்கு திருமண ஏற்பாடு நடந்து வருகிறது.

ஆனால் வெண்பா தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி பாரதியை கல்யாணம் பண்ணிக்க சொல்லி வற்புறுத்தி உள்ளார். தற்கொலை வரை வெண்பா சென்றதால் வேறு வழி இல்லாமல் பாரதியும் அவரை திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொண்டுள்ளார். ஆனால் பாரதி தற்போது டிஎன்ஏ டெஸ்ட்க்கு கொடுத்துள்ளார்.

Also Read :பெண்கள் முன் ஹீரோயிசம் காட்டும் அசீம்.. குறும்படம் போட்டு கரியை பூச போகும் ஆண்டவர்

இதில் ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் தனக்கு பிறந்த குழந்தைகள் என்று தெரிய வந்தால் கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்டு ஏற்றுக் கொள்வதாக பாரதி முடிவெடுத்துள்ளார். ஆனால் டெஸ்ட் ரிப்போர்ட் வர காலதாமதமாகி கொண்டிருக்கிறது. மேலும் வெண்பா பாரதியை திருமணம் செய்து கொள்வதற்காக மண்டபத்தில் இருந்து வெளியேறி விட்டார்.

இந்நிலையில் வெண்பாவை திருமணம் செய்து கொள்ள பாரதி கோவிலுக்கு வருகிறார். அங்கு கடைசி நேரத்தில் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் வந்து ஹேமா, லட்சுமி இருவரும் தனக்குப் பிறந்த பிள்ளைகள் தான் என்று பாரதிக்கு தெரிய வருகிறது. இதனால் கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்கிறார்.

Also Read :கோபி அங்கிள் உங்க நிலைமையை பார்த்தால் ரொம்ப கேவலமா இருக்கு.. பொண்டாட்டி அருமை புரியுதா?

மேலும் இத்தனை நாள் கண்ணம்மாவை தப்பாக புரிந்து கொண்டேன் என்று சொல்லிவிட்டு வெண்பா கழுத்தில் தாலி கட்ட பாரதி மறுக்கிறார். கடைசி வரை பாரதியை திருமணம் செய்து கொள்ள முடியவில்லை என்ற விரக்தியில் வெண்பா தற்கொலை செய்ய முற்படுகிறார்.

ஆனால் கடைசி நேரத்தில் இயக்குனர் பாரதி கண்ணம்மா தொடரில் அதிரடி ட்விஸ்ட் வைத்து வெண்பாவை ரோஹித் திருமணம் செய்து கொள்ளும்படி கதைக்களத்தை அமைக்க உள்ளார். இத்துடன் இத்தொடர் இனிதே முடிய உள்ளது. மேலும் பாரதி கண்ணம்மா தொடரின் அடுத்த அத்தியாயம் வர உள்ளதாக தகவலும் வெளியாகியுள்ளது.

Also Read :வெடிக்கும் சக்களத்தி சண்டை.. பாரதிகண்ணம்மா சீரியல் ஏற்படும் அதிரடி திருப்பம்

- Advertisement -