வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

அந்நியனாக மாறிய கண்ணம்மா, தெறித்து ஓடிய வெண்பா.. பாரதி கண்ணம்மா இந்த வாரம்

பாரதி கண்ணம்மாவில் இந்த வாரம் வெண்பா, கண்ணம்மாவை மீண்டும்  விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட மிரட்டுகிறார். தன் குழந்தை ஹேமாதான் என்று தெரிந்து கொண்ட கண்ணம்மா வெண்பாவை கலாய்க்கிறார்.

தன் குழந்தை யார் என்று தெரிந்து கொண்ட கண்ணம்மா அதை வெண்பாவிடம் காட்டிக்கொள்ளாமல் நடிக்கிறார். டைரக்டர் அந்நியன் படத்தை இப்பதான் பார்த்திருப்பார் போல, அந்த படத்துல வர்ற விக்ரம் போல கண்ணம்மாவை நடிக்க சொல்லியிருக்காரு.

கண்ணம்மாவும் அப்படியே அந்நியனா மாறி வெண்பாவை மிரட்டுறாங்க. கண்ணம்மாவோட புது அவதாரத்தை பார்த்த வெண்பா தலைதெறிக்க ஓடுகிறார். இதுதான் பாரதி கண்ணம்மாவோட இந்த வார புரோமோ.

வெண்பாவை வெறுப்பேத்த சான்ஸ் கிடைச்சா அதை பக்காவா செய்யுற கண்ணம்மா இப்போதும் அதையே செய்றாங்க. இது போல தன் தங்கச்சியை அஞ்சலியோட வளைகாப்புலயும் பாரதியோட சேர்ந்து உட்கார்ந்து வெண்பாவை வெறுப்பேற்றினார்.

இந்த ப்ரோமோ பார்த்த ரசிகர்கள் இனிமேல்தான் கண்ணம்மாவின் ஆட்டம்  ஆரம்பமாகப் போகிறது என்றும்,  இப்படி துருதுருன்னு இருக்குற கண்ணம்மாவை தான் எங்களுக்கு பிடிச்சிருக்கு என்றும் புகழ்ந்து வருகின்றனர்.

எப்படியோ பாரதிய டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வைத்து கண்ணம்மாவோடசேர்த்து வைங்கப்பா என்று ரசிகர்கள் டைரக்டருக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

- Advertisement -

Trending News