விஜய் டிவியில் தாறுமாறாக டிஆர்பி ரேட்டிங்கை குவிக்கும் பிரபல தொடர் பாரதிகண்ணம்மா. இந்த தொடரில் கதாநாயகியை காட்டிலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக இருப்பது வில்லி வெண்பா கேரக்டர். தனது வில்லத்தனமான நடிப்பினால் பாரதிகண்ணம்மா சீரியலின் கதைக்களத்தை அதிர வைத்தவர் வெண்பாவாக நடிக்கும் பரினா.
இவர் முதலில் தொகுப்பாளினியாக ஒரு சமையல் நிகழ்ச்சியில் கலக்கினார். பின்னர் பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் தனது நடிப்பு திறனை வெளிக்காட்டி அதிர வைத்தார். மக்களின் மனதில் வில்லியாக வெண்பா சீரியலால் திட்டு வாங்கினாலும் மக்களுக்கு மிகவும் பிடித்த வில்லியாகவும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவராகவும் இந்த தொடரை விருவிருப்பின் உச்சத்திற்கு எடுத்துச் சென்றதும் நடிகை பரினா, இந்த வெண்பா கதாப்பாத்திரம் இல்லை என்றால் இந்த சீரியல் வெற்றிப் பயணத்தை நோக்கி செல்லவே முடியாது என்பது அனைவரும் அறிந்ததே.
தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பரினா தன்னுடைய பிரசவத்திற்கு தயாராகி வருவதால் தொடர்ந்து பாரதிகண்ணம்மா சீரியலில் நடிப்பாரா என்பது சந்தேகம்தான். வெண்பா கதாபாத்திரத்தை வைத்தே சீரியலை ஓட்டிய படக்குழுவினருக்கும் இது ஒரு அதிர்ச்சி தகவலே.
பரினாவிற்கு பதில் வெண்பா கேரக்டருக்கு தற்போது விஜே மணிமேகலை அல்லது பிக் பாஸ் சீசன்4 போட்டியாளரும் செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் நடிக்கலாம் என சமூக வலைதளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகிறது ஆனால் இதன் அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
பிக்பாஸ் வீட்டில் அடிக்கடி அழுதபடி இருந்த அழுமூஞ்சி அனிதா இப்போது வில்லி வெண்பா வாக உருமாற போகிறார். இவர் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா? அத்துடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கிய மணிமேகலைக்கு வெண்பா கதாபாத்திரம் சுத்தமாக செட்டாகாது.
இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் படக்குழுவினரிடம் இருந்து வெளிவராத நிலையில் பரினாவே தொடர்ந்து நடிப்பாரா என்று மக்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். பரினாவின் வில்லத்தனமான நடிப்பை யாரும் மிஞ்சவே முடியாது அவர் இந்தத் தொடரில் பரினா இல்லை என்றால் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கை கண்டிப்பாக இழக்க நேரிடும்.