வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பரபரப்புடன் செல்லும் பாரதிகண்ணம்மா சீரியல்.. பிக்பாஸுக்கே சவால் விடும் கதைக்களம்!

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாரதிகண்ணம்மா. இந்த சீரியல் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் டாப் இடங்களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகிறது. இந்த சீரியலில் அவ்வப்போது ஏற்படும் திருப்பங்களால் பார்வையாளர்கள் திருப்தி அடைந்து வருகின்றனர். அவ்வாறாக கடந்த எபிசோடில் பாரதி வெண்பாவிடம் கூறும் விஷயங்கள் அனைத்தும் வெண்பாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரதியும் கண்ணம்மாவும் பேசிக் கொள்ளும் விஷயங்களை வெண்பாவிடம் வந்து கூறுகிறார் பாரதி. வழக்கம்போல் பாரதியை தூண்டிவிடுகிறார் வெண்பா. பாரதியும் கண்ணம்மாவும் கடற்கரையில் சந்தித்து பேசுகின்றனர். அப்போது கண்ணம்மா தனக்கு இரு குழந்தைகள் பிறந்ததாக பாரதியிடம் கூறுகிறார். பாரதி இல்லை என்று மறுப்பு தெரிவித்து கண்ணம்மாவிடம், ஒரு குழந்தையோ, இரு குழந்தையோ அது எனக்கு பிறந்தது அல்ல என்று கூறி அவமானப்படுத்தி விடுகிறார்.

அத்துடன் கண்ணம்மாவிற்கு பிரசவம் பார்த்ததே பாரதிதான் என்றும் ஒப்புக் கொள்கிறார் பாரதி. பாரதியின் இந்த கருத்தை கேட்டு அதிர்ச்சி அடைகிறாள் வெண்பா. மேலும் கண்ணம்மாவை பிடிக்கவில்லை என்று கூறியே அவளிடம் சந்தித்து பேசுவது, அவள் குழந்தையை படிக்க வைப்பது போன்று அவளுக்கென அனைத்துப் பணிவிடைகளையும் செய்து வருகிறாயே என்று பாரதியை தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கிறாள் வெண்பா. அவளின் பேச்சை கேட்டு கோபத்துடன் அங்கிருந்து புறப்பட்டு விடுகிறார் பாரதி.

அதன்பிறகு வெண்பா, கண்ணம்மாவிடம் பாரதியை விவாகரத்து செய்து விட வேண்டும் என்று விவாகரத்து பத்திரத்தை கொடுத்து கையெழுத்துப் போடச் சொல்கிறார். அந்த சமயம் பார்த்து சௌந்தர்யா அங்கு வர, அந்தப் பாத்திரம் சௌந்தர்யாவின் கண்ணில் தெரிந்துவிடுகிறது.

bharathi-kannamma-serial-cinemapettai
bharathi-kannamma-serial-cinemapettai

அதன் பிறகு கண்ணம்மா, ‘என்னுடைய இன்னொரு குழந்தையின் பற்றி தெரிந்து கொள்ள, நான் பாரதியை விவாகரத்து செய்து கொண்டால் தான் தெரியவரும்’ என்று சௌந்தர்யாவிடம் சொன்னதும், உடனே சௌந்தர்யா ‘ஹேமாதான் உன்னுடைய இன்னொரு குழந்தை’ என்று உண்மையை உடைத்து விடுகிறார்.

எனவே வரும் நாட்களில் பாரதிகண்ணம்மா சீரியல் விறுவிறுப்பாக செல்லும் என்பதால் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சவால் விடும் அளவுக்கு கதைக்களத்தை இயக்குனர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இருப்பினும் ரசிகர்களின் மத்தியில் பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் இடையே ஏற்படக்கூடிய ரொமான்ஸ் காட்சிகளுக்கு தான் வரவேற்பு அதிகம் என்பதை எப்போது இயக்குனர் புரிந்து கொள்ளப் போகிறார் என்று தான் தெரியவில்லை.

- Advertisement -

Trending News