உங்க சேட்டைக்கு அளவே இல்லாம போகுது.. பாரதி கண்ணம்மா சீரியலை கலகலப்பாக்கும் வீடியோ.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா சீரியலை பார்ப்பதற்கென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. எட்டு வருடங்களாக பிரிந்திருக்கும் கணவன் மனைவியான பாரதி மற்றும் கண்ணம்மாவை சேர்த்து வைக்க பாரதியின் குடும்பத்தினருக்கு படாத பாடுபட்டு வருகின்றனர்.

இதற்காக அவர்கள் பல விதங்களில் திட்டங்களைத் தீட்டி அரங்கேற்றுகின்றனர். அதையெல்லாம் பாரதிகண்ணம்மா சீரியல் இன் வில்லியான வெண்பா சுக்கு நூறாக உடைத்து விடுகிறார்.

இந்த நிலையில் கடைசியாக பாரதியின் அப்பா தனக்கு நெஞ்சு வலிப்பது போல் நடித்து மருத்துவமனையில் அனுமதித்த போதும், பாரதியை கண்ணம்மா உடன் சேர்ந்து வாழச் சொல்கிறார்.

வேறு வழியில்லாமல் பாரதியும் அதற்கு ஒத்துக் கொண்டுள்ளார்.அதன் பிறகு பாரதி வெளியே சென்றதும் நாடகமாடிய பாரதியின் தந்தை முட்டை போண்டா சாப்பிடுவது போன்ற காமெடியான எபிசோட் இன்று அரங்கேற உள்ளது.

அதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக கண்ணம்மா பாரதியை விவாகரத்து செய்து விடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

bharathi-kannama-cinemapettai
bharathi-kannama-cinemapettai

ஆனால் தற்போது பாரதிகண்ணம்மா சீரியலை காமெடியுடன் கலகலப்பாக கொண்டு செல்ல, பாரதிகண்ணம்மா சீரியலின் இயக்குனர் முடிவெடுத்துவிட்டார். பாரதி கண்ணம்மா ப்ரோமோ

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்