வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

கர்ப்பமாக இருந்தாலும் இத செஞ்சே தீருவேன்.. அடம்பிடிக்கும் பாரதிகண்ணம்மா வெண்பா!

தொலைக்காட்சி சீரியல்கள் ரசிகர்களின் வரவேற்பை பெரிதும் பெற்றவர்கள் அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா சீரியல் சமீபகாலமாக அதிக வரவேற்ப்பை பெற்ற தொடராகும்.

வேலைக்காரன், ராஜாராணி, சின்னத்தம்பி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற தொடர்களில் புகழ் பெற்றது பாரதிகண்ணம்மா சீரியல் அடங்கும். ஆரம்ப காலத்தில் இல்லாத அளவிற்கு சமீபகாலமாக அதிக அளவு மக்களிடையே பிரபலமானது பாரதிகண்ணம்மா தொடர்.

அதற்கு முக்கிய காரணம் கண்ணம்மா வீட்டை விட்டு வெளியேறி பையை தூக்கிக் கொண்டு போகும் காட்சிக்கு வந்த மீம்ஸ்களை ஆகும். அந்த காட்சியை மீண்டும் மீண்டும் ட்ரோல் செய்து அதன் டிஆர்பி அதிகரிக்க செய்தது அந்த காட்சி.

பாரதிகண்ணம்மா தொடரில் வில்லியாக வெண்பா நடிப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றது. இந்த தொடருக்கு முன் சன் டிவியில் தொகுப்பாளினியாக கலர்ஸ் தொலைக்காட்சியில டாரி தொடரிலும் நடித்திருந்தார்.

இப்போது வில்லியாக வந்து மிரட்டுகிறார், இத்தொடரில் பரீனா நடிப்பு மிகவும் எதார்த்தமாக இருக்கும். அவரை திட்டாதவர்களே இல்லாத அளவிற்கு தத்ரூபமாக நடித்திருப்பார். இருப்பினும் அவர் தொடர்ந்து நடிப்பாரா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு பரினா ரஹ்மான் உபைத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இப்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்நிலையில் ரசிகர்கள் பாரதிகண்ணம்மா தொடரில் பார்க்க முடியாதா என்று கேள்வி கேட்டிருந்தனர்.

இதற்கு பரினா வெண்பா கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிப்பேன் என்று ஒரு வீடியோ பதிவில் கூறியிருக்கிறார். எனக்கு நடிப்பதற்கு ஒரு சிரமமும் இல்லை. முடிந்தவரை நானே தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியுள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

farina azad
farina azad
- Advertisement -

Trending News