ஜெயிலுக்கு போயும் திருந்தாத வெண்பா.. மட்டமான செயலால் அடியோடு வெறுக்கும் பாரதி

விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலில் நடிக்கும் கதாநாயகன் கதாநாயகியை விட பெரிதும் பேசப்படும் கதாபாத்திரம் வில்லி வெண்பா. இதில் வெண்பாவாக நடிக்கும் பரீனா. அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

இந்த சீரியலில் வெண்பா சட்டத்திற்கு முரணாக கருக்கலைப்பு ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு ஜாமினில் வெளிவந்த டாக்டர் வெண்பா, மருத்துவராக தன்னுடைய பணியை தொடரக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதை மீறி தன்னுடைய மருத்துவமனையில் பணிபுரிந்ததால், மீண்டும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளார்.

இதை அறிந்ததும் போலீசார் வெண்பாவை மருத்துவமனையில் இருந்து விரட்டி, ஹாஸ்பிட்டலுக்கு சீல் வைத்தனர். இது ஒருபுறமிருக்க எதர்ச்சியாக சந்தித்த சாமியார் சொன்ன வாக்கில் உண்மை இருக்குமோ என்ற சந்தேகத்தில் பாரதி, கண்ணம்மாவை கொஞ்சம் கொஞ்சமாக நம்ப துவங்கியுள்ளார்.

அதற்கேற்றாற்போல் வெண்பாவின் மீது கடும் கோபத்தில் இருக்கும் பாரதி, அடுத்தடுத்து வெண்பாவின் இழிவான செயலை கண்டு சுத்தமாகவே வெறுக்கிறார். அத்துடன் தற்போது மருத்துவமனைக்கு சென்றதும், அதன் பிறகு போலீஸ் மருத்துவமனைக்கு சீல் வைத்ததும் தொலைக்காட்சியில் நியூஸ் ஆக வெளியானதை பார்த்த பாரதி வெண்பாவை அடியோடு வெறுக்க ஆரம்பித்துவிட்டார்.

பாரதிக்கு கண்ணம்மாவின் மீது கரிசனை ஏற்பட்டு கொண்டிருப்பதால் விரைவில் உண்மையை தெரிந்து கொண்டு தன்னுடைய இரு குழந்தை மற்றும் மனைவியுடன் சேர்ந்து வாழ போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஏற்கனவே கண்ணம்மாவை பழிவாங்க துடிதுடித்து காத்துக் கொண்டிருந்த வெண்பாவிற்கு அடிமேல் அடி விலகுவதால், கண்ணம்மாவின் மீது இருக்கும் பழிவாங்கும் எண்ணம் வெண்பாவிற்கு வெறியாக மாறிக்கொண்டிருக்கிறது. எனவே பாரதிகண்ணம்மா சீரியலில் வெண்பாவின் கதாபாத்திரத்திற்கு கூடுதல் வலு சேர்க்கும் விதத்தில் சீரியலின் இயக்குனர் செய்யும் சித்து வேலை ரசிகர்களை தொடர்ந்து ஈர்த்துக் கொண்டிருக்கிறது.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை