புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் வெங்கடேஷ் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்

சன் டிவியில் ஒளிபரப்பான செல்லமடி நீ எனக்கு என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் கால் பதித்தவர் தான் நடிகர் வெங்கடேஷ். இவர் சரவணன் மீனாட்சி, பாரதிகண்ணம்மா, ஈரமான ரோஜாவே ஆகிய தொடர்களில் நடித்து வந்தார்.

கிராமத்து தந்தை கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருப்பதால் பல சீரியல்களில் இவர் அப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் டாப் சீரியல் ஆன பாரதிகண்ணம்மா தொடரில் கண்ணம்மாவுக்கு தந்தையாக நடித்து பல ரசிகர்களின் உள்ளத்தில் நீங்காத இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் வெங்கடேஷ் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

அதாவது  பல்வேறு சீரியல்களிலும் பல திரைப்படங்களிலும்  சில சிறு சிறு வேடங்களில் நடித்து பிரபலமானவர் தான் வெங்கடேஷ். அதிலும் குறிப்பாக பீட்சா, சூது கவ்வும், தெகிடி போன்ற படங்களில் வெங்கடேஷ் நடித்துள்ளார். மைனா படத்தில் இவருடைய கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது.

 Venkatesh
Venkatesh

இந்த நிலையில் நேற்று மதியம் 2. 30 மணி அளவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். இதனால் அவருடைய ரசிகர்களும் சின்னத்திரை பிரபலங்களும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். மேலும் பல்வேறு சின்னத்திரை பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News