கண்ணம்மாவுக்கு பதில் ருத்ரதாண்டவம் ஆடிய நபர்.. பாரதியை குடும்பமாக வச்சு செய்த சம்பவம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களின் ஆதரவுடன் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் சந்தேக புத்தியால் மனைவியை பிரியும் பாரதி தற்போது கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ நினைக்கிறார்.

இதைப் பற்றி பாரதி தன் குடும்பத்தினரிடம் மிகவும் மகிழ்ச்சியாக கூறுகிறார். இதனால் பாரதி மனம் திருந்தி விட்டதாக கண்ணம்மா உட்பட அனைவரும் நம்புகின்றனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பாரதி, கண்ணம்மா செய்த தவறை ஒத்துக் கொண்டால் மீண்டும் சந்தோஷமாக வாழ்கிறேன் என்று கூறுகிறார்.

இதனால் வெறுப்படைந்த கண்ணம்மா, நீ திருந்தவே மாட்ட என நினைத்து பாரதியிடம் எதுவும் பேசாமல் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார். பாரதியிடம் இருந்து இப்படி ஒரு பேச்சை எதிர்பாராத அவரின் குடும்பத்தினர் அவரின் மீது கடும் ஆத்திரத்தில் இருக்கின்றனர்.

இவ்வளவு நடந்தும் ஒன்றுமே நடக்காதது மாதிரி இருக்கும் பாரதியை குடும்பம் மொத்தமும் சேர்ந்து திட்டி தீர்க்கின்றனர். அதில் பாரதியின் தம்பி பாரதியைப் பார்த்து படு கேவலமாக திட்டுகிறார். உன் பேஷண்ட் செத்து போனதற்கு நீ தான் காரணம் என்று உன்னை பழியை ஏற்றுக் கொள்ள சொன்னால் உனக்கு எப்படி இருக்கும் என்று கேட்கிறார்.

அதற்கு பாரதி லாஜிக் இல்லாமல் ஏன் இப்படி பேசுற என்று கேட்கிறார். அப்ப நீயும் அப்படித்தான் அண்ணியை செய்யாத தப்புக்கு பொறுப்பேற்க சொல்ற, அது எப்படி முடியும். ஏதோ அண்ணி இன்னைக்கு நல்ல மூடில் இருந்தால் நீ தப்பிச்ச. இல்லன்னா அண்ணி உன்ன அசிங்க அசிங்கமா பேசி இருப்பாங்க என்று கூறுகிறார்.

இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாத பாரதி வழக்கம்போல் திருதிருவென முழிக்கிறார். பாரதியின் இந்த பேச்சினால் கண்ணம்மா ருத்ர தாண்டவம் ஆடுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அவர் அமைதியாகச் சென்றது பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. இருந்தாலும் அகிலின் இந்த பேச்சு அனைவரையும் கவர்ந்துள்ளது. இன்னும் இதுபோன்ற பல தரமான சம்பவங்கள் பாரதிகண்ணம்மா சீரியலில் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்