பாரதியை கெஞ்ச வைத்த கண்ணம்மா.. செம்ம ட்விஸ்ட்

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்களின் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து டிஆர்பி ரேட்டிங்கை அதிகரித்துக் கொண்டிருப்பது பாரதிகண்ணம்மா சீரியல். விறுவிறுப்பான கதை களத்தாள் ஒவ்வொரு வாரமும் மக்களின் ஆர்வத்தை தூண்டிக் கொண்டிருக்கிறது பாரதிகண்ணம்மா நெடுந்தொடர்.

தற்பொழுது இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி மக்கள் மத்தியில் ஆச்சர்யத்தையும் ஆர்வத்தையும் தூண்டியிருக்கிறது அந்த அளவிற்கு கதைக்களத்தில் விறுவிறுப்பை மெருகேற்றி இருக்கிறார் இயக்குனர் பிரவீன் பெண்ணெட். கடந்த வார எபிசோடில் அஞ்சலி ஹேமாவை தன் வீட்டிற்கு அழைத்து செல்வதாக பாரதியிடம் கூறிவிட்டு கண்ணம்மா வீட்டிற்கு பாரதிக்கு தெரியாமல் அழைத்துச் செல்கிறார்.

இந்த வார ப்ரோமோவில் அஞ்சலியும், ஹேமாவும் கண்ணம்மா வீட்டில் இருக்கிறார்கள் என்பதை எப்படியோ பாரதி அறிந்து கொண்டு கண்ணம்மா வீட்டில் இல்லாத சமயத்தில் அஞ்சலியையும் ஹேமாவையும் திரும்ப அழைத்து செல்வது போல வெளியாகி இருப்பது மக்களின் மனதில் கேள்வியை எழுப்பும் விதமாக அமைந்துள்ளது.

அதைத்தொடர்ந்து ஹேமா தன்னிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பிரிகிறாலோ என்று உணர்ந்த பாரதி, சாட்சிக்காரன் காலில்விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என்பதுபோல் கண்ணம்மாவிடம் ஹேமாவை என்னிடமிருந்து பிரித்து விடாதே என்று பாரதி கையெடுத்து கெஞ்சுவது போல் ப்ரோமோ ரிலீஸாகி ரசிகர்களை இது கனவா அல்லது நனவா என நினைக்க வைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பாரதி கெஞ்சும் போது கண்ணம்மாவின் எண்ண ஓட்டத்தில் பாரதி தன்னை அறியாமலேயே ஹேமாவை என் மகள் என் மகள் என்று கூறுகிறாரே என நினைத்து மகிழ்வுடன் இருப்பது போலவும் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

bharathi-kannama
bharathi-kannama

அஞ்சலியும் ஹேமாவும் கண்ணம்மா வீட்டிற்கு சென்றது பாரதிக்கு எப்படி தெரியும் என்ற வினாவிற்கு காத்திருந்து எபிசோடில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்