பாரதியுடன் சேர்ந்து வாழ ஆசைப்படும் கண்ணம்மா.. மனசு வைப்பாரா டைரக்டர்

தன்மேல் சந்தேகப்பட்ட பாரதியை உன்னுடன் வாழ முடியாது போடா என்று உதறி தள்ளிவிட்டு வீட்டை விட்டு சென்ற கண்ணம்மா எட்டு வருடங்களுக்குப் பிறகு பாரதியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் கோர்ட் படி ஏறினார்.

விவாகரத்து வேண்டும் என்று கோர்ட்டில் நிற்கும் பாரதிக்கு நீதிபதி அறிவுரை செய்து பாரதி, கண்ணம்மா இருவரும் ஆறு மாத காலம் சேர்ந்து வாழ வேண்டும் என்று தீர்ப்பு வழங்குகிறார். அதைக் கேட்டு பாரதியை தவிர குடும்பத்தில் உள்ள அனைவரும் சந்தோஷபடுகின்றனர்.

கண்ணம்மாவின் வரவுக்காக காத்திருக்கும் பாரதியின் அம்மா சௌந்தர்யா, கண்ணம்மாவுக்கு போன் செய்து வீட்டிற்கு எப்பொழுது வருகிறாய் என்று கேட்கிறார். அதற்கு கண்ணம்மா உங்கள் மகன் தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறுகிறார்.

உடனே குடும்பத்தில் உள்ள அனைவரும் கோர்ட்டில் கொடுத்த தீர்ப்பு படி நடக்குமாறு பாரதியை நச்சரிக்கிறார்கள். இதனால் பாரதி செய்வதறியாது திணறுகிறார். பாரதி கண்ணம்மாவில் வரும் வாரம் இந்த காட்சிகள் தான் ஒளிபரப்பாக உள்ளது.

கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ பாரதியே ஒப்புக் கொண்டாலும் அந்த சீரியலின் டைரக்டர் விட மாட்டார் போல. கதையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு இழுத்துக் கொண்டே செல்கிறார்.

பழைய கண்ணம்மா கண்ணாலே பேசுவார் ஆனால் இந்த புதிய கண்ணம்மாவுக்கு வாய் மட்டும் தான் பேசுகிறது என்று ரசிகர்கள் கழுவி ஊற்றுகின்றனர். இருந்தாலும் டைரக்டர் கதையை இப்போ முடிக்க மாட்டார். பாரதிக்கு டிஎன்ஏ டெஸ்ட், வெண்பாவின் வில்லத்தனம் என்று கதையை இன்னும் ஒரு நாலு வருஷம் இழுத்து விடுவார்.

 

 

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்