புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

நிறைமாத கர்ப்பிணிக்கு இப்படியா டயலாக் வைப்பது.. பாரதிகண்ணம்மா இயக்குனருக்கு விழுந்த அர்ச்சனை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ என்ற சீரியலில், வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடிக்கும் நடிகைதான் பரீனா. இவர் சின்னத்திரையில் தொடக்கத்தில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, அதன் பின் முன்னணி சீரியல்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவர் திருமணமாகி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால்,

அவ்வபோது போட்டோ ஷூட்களை நடத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். எனவே பரீனாவிற்கு சோசியல் மீடியாக்களில் அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் வெண்பா, பாரதி கண்ணம்மா சீரியல் இருந்து விலகி விடுவாரா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த வெண்பா இப்போதைக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலக மாட்டார் என்பதை ஆணித்தரமாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். எனவே தற்போது நிஜவாழ்வில் கர்ப்பமாக இருக்கும் வெண்பாவை மோசமான வசனத்தை பேச வைக்கும் விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியல் இயக்குனரை ரசிகர்கள் திட்டித் தீர்க்கின்றனர்.

ஏனென்றால் தற்போது பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் இரண்டாவது குழந்தையின் நிலை என்ன என்பதை தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் இருக்கும் கண்ணம்மாவை, வெண்பா கடற்கரைக்கு கண்ணைக்கட்டி அழைத்துச் சென்று அலைக்கழித்தார் .

farina azad
farina azad

அத்துடன் இரண்டாவது குழந்தை இப்பொழுது பிச்சை எடுத்துக் கொண்ருடிக்கிறது என்றும் கண்ணம்மாவின் தாய்மை உணர்வுடன் விளையாடும் வெண்பாவை கண்ணம்மா ரசிகர்கள் இது சீரியல் தான என்று நினைக்காமல் தவறாக பேசி வருகின்றனர். மேலும் நிஜ வாழ்க்கையில் கர்ப்பமாக இருக்கும் வெண்பாவிற்கு இதுபோல வசனங்களை வைக்கும் விஜய் டிவியையும், பாரதிகண்ணம்மா சீரியல் இயக்குனரையும் நெட்டிசன்கள் சரமாரியாக விளாசி வருகின்றனர்.

- Advertisement -

Trending News