விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா சீரியல் டிஆர்பி நம்பர் ஒன்னாக உள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் இப்போது விறுவிறுப்பாக செல்கிறது.
அஞ்சலி கர்ப்பமாக உள்ளதால் அடிக்கடி நெஞ்சு வலி வருகிறது. அஞ்சலி மருத்துவமனைக்கு செல்லும் போது பிரசவத்தில் சிக்கல் உள்ளது,அஞ்சலி உயிருக்கு ஆபத்து என மருத்துவர் சொன்னார். இதைக்கேட்ட அஞ்சலி குழந்தையை கண்டிப்பாக பெற்றெடுக்க வேண்டும் என உறுதியாக உள்ளார். அஞ்சலிக்கு தனக்குள்ள பிரச்சினையை வீட்டில் தெரியாமல் பார்த்துக் கொள்கிறாள்.
ஒரு நாள் அஞ்சலிக்கு நெஞ்சு வலி வரும் போது எதார்த்தமாக வெண்பா வீட்டிற்கு வருகிறாள். அஞ்சலிக்கு சிகிச்சை பார்க்க சொல்லி அஞ்சலியின் மாமியார் சௌந்தர்யா வெண்பாவிடம் சொல்கிறார்.அஞ்சலியின் ரிப்போர்ட்டை பார்த்த வெண்பா அஞ்சலியின் பிரச்சினையை அறிகிறாள்.அஞ்சலிக்கு தவறான மருந்துகளை பாரதி பிரிஸ்கிரிப்ஷனில் எழுதிக் கொடுக்கிறாள்.
அஞ்சலி மாத்திரை சாப்பிடும்போது பல்லி விழுந்ததால் மாத்திரை கீழே போட்டுவிட்டார். மாத்திரையை சாப்பிடுவதா என யோசித்துக் கொண்டிருக்கும்போது மாமியார் சௌந்தர்யா அங்கு வந்து, ஏன் எல்லா மாத்திரையும் இரண்டு மாத்திரையாக வைத்துக்இருக்கிறாய் என கேட்கிறார்.
வெண்பா தான் அப்படி போட சொன்னாள், பாரதி மாமா எழுதி கொடுத்தது என்று அஞ்சலி சொல்கிறாள். சௌந்தர்யா அஞ்சலியிடம் எந்த மாத்திரையும் ஒரு டோஸ் தான் போட வேண்டும் என அறிவுரை கூறுகிறாள். பின்பு அந்த மாத்திரையை அஞ்சலி சாப்பிடுகிறாள் திரும்பவும் அஞ்சலிக்கு நெஞ்சுவலி ஏற்படுகிறது.
கண்ணம்மாவின் இரண்டாவது குழந்தையை மறைத்து வைத்துள்ளதாக கண்ணம்மாவை மிரட்டி வருகிறாள் வெண்பா. கண்ணம்மா வெண்பாவிற்கு போன் செய்யும் போது வெண்பா வேண்டுமென்றே போனை எடுக்காமல் இழுத்தடிக்கிறாள்.
கண்ணம்மா கோபமாக வெண்பா வீட்டிற்குச் சென்று வெண்பாவின் கழுத்தை பிடித்து எச்சரிக்கிறாள். உன் குழந்தை உனக்கு வேணும்னா பாரதிய டைவர்ஸ் பண்ணு என வெண்பா சொல்லுகிறாள். அதற்குக் கோபம் அடைந்தாள் கண்ணம்மா. அப்படி செய்தால் உன் குழந்தையை உன்னிடம் தருகிறேன் என்றாள் வெண்பா.