திங்கட்கிழமை, டிசம்பர் 2, 2024

இறுதி அத்தியாயத்தில் சூடு பிடிக்கும் பாரதி கண்ணம்மா.. கடைசி அஸ்திரத்தை கையில் எடுத்த இயக்குனர்

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் இறுதி அத்தியாயம் என பலமுறை சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கும் சீரியலின் இயக்குனர் இந்த முறையாவது கிளைமாக்ஸ் காட்டுவாரா என சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கிழித்து தொங்க விடுகின்றனர்.

இப்போது பாரதிக்கு தலையில் அடிபட்டு எல்லாம் நியாபகத்தையும் இழந்திருப்பதால், கண்ணம்மா மூலமாக பழைய நினைவுகளை மீட்டெடுக்க முயற்சிக்கின்றனர். இதற்காக கண்ணம்மா திருமணத்திற்கு முன்பு பாரதி காதலித்த பழைய கண்ணம்மாவாக மாறி உள்ளார்.

Also Read: பொண்டாட்டிங்க தொல்லையால் மார்க்கெட் இழந்த நடிகர்.. பிக் பாஸ் வீட்டுக்குள்ள வந்தும் ப்ரோஜனம் இல்ல

மேலும் இந்த சீரியலை பார்க்க தூண்டிய டைட்டில் பாடலையும் தற்போது சீரியலில் ஒலிக்கவிட்டு ரசிகர்களை உருக வைத்திருக்கின்றன. மேலும் முதல் முதலாக பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் சந்தித்த அதே இடத்தில் கண்ணம்மா அந்த பாடலை பாடிக்கொண்டு வருகிறார்.

அந்தப் பாடல் பாரதிக்கு கேட்க அவரும் கண்ணம்மாவை பின் தொடர்ந்து வருகிறார். கடைசியில் இருவரும் சந்திக்கின்றனர். அந்த சமயம் இருவரும் தங்களுக்கு இடையே இருந்த காதலை வெளிப்படுத்துகின்றனர். இவ்வளவு நாள் பாரதி மீது கோபத்தில் இருந்து கண்ணம்மா பாரதியின் நினைவை மீட்டெடுப்பதற்காக குடும்பத்தாருடன் துணை நிற்கிறார்.

Also Read: விக்ரமன் தோல்விக்கு இவர் தான் காரணம்.. உச்சகட்ட அதிர்ச்சியில் பிக் பாஸ் ரசிகர்கள்

இப்படி நெகிழ்வான தருணம் பாரதிகண்ணம்மா சீரியலில் ஒளிபரப்பாகி இறுதி அத்தியாயத்தை நோக்கி செல்கிறது. இதன்பின் பாரதிக்கு பழைய நினைவுகள் எல்லாம் வந்துவிடுகிறது. பிறகு தன்னுடைய இரண்டு மகள்கள் மற்றும் கண்ணம்மாவுடன் பாரதி மீண்டும் சென்னைக்கு கிளம்புவார்.

அத்துடன் இந்த சீரியல் நிறைவடையும். இதன்பிறகு பாரதியின் இரண்டு மகள்கள் ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் வளர்ந்த நிலையில் அவர்களை மையமாக வைத்து பாரதிகண்ணம்மா சீரியலின் இரண்டாம் பாகத்தை எடுக்க, சீரியலின் இயக்குனர் திட்டமிட்டு இருக்கிறார்.ஆகையால் முதல் பாகத்தை சீக்கிரம் முடித்துவிட்டு இரண்டாம் பாகத்தை துவங்குங்கள் என்றும் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.

Also Read: அசீம் வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாது.. விஜய் டிவிக்கு எதிராக இணையத்தில் கொந்தளித்த கூட்டம்

- Advertisement -spot_img

Trending News