பட்டு பட்டுனு சீக்ரெட்களை உடைத்தெறிந்த பாரதி கண்ணம்மா! 40 எபிசோட் கதையை நான்கே நாளில் சொன்னது ஏன்?

விஜய் டிவியில் மக்களை கவரும் வகையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், பாரதிகண்ணம்மா என்னும் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, அதிக டிஆர்பி ரேட்டிங்கை பெற்றுள்ளது. இந்த தொடர் பாரதி என்கின்ற மருத்துவருக்கும் மற்றும் படிக்காத கண்ணம்மாவிற்கும் இடையே காதல் மலர்ந்து, இருவரும் திருமணம் முடிந்தபின் வாழும் வாழ்க்கையை ஒரு மையமாக வைத்து தொடங்கப்பட்ட கதையே பாரதி கண்ணம்மாவாகும்.

அதன்பின், அவர்களது திருமணம் நடந்தது. அவர்கள் இடையே நடக்கும் ரொமான்டிக் சீன்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதற்கிடையே, பாரதியை ஒரு தலையாக காதல் செய்யும் வெண்பா கதாபாத்திரம் இடம்பெற்றுள்ளது. கண்ணம்மா நிறை மாசமாக இருந்த போது பாரதியிடம் கண்ணம்மா தவறானவள், இது உன்னுடைய குழந்தை அல்ல என்பது போன்ற தவறான கருத்துக்களை கூறி பாரதியை மூளைச்சலவை செய்தாள் வெண்பா.

பாரதியின் சந்தேகத்தினால், வீட்டை விட்டு வெளியேறிகிறாள் கண்ணம்மா. அவளுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்து இருக்கும். இதற்கிடையே, பாரதி கண்ணம்மாவிற்கு  பிரசவம் பார்த்திருப்பான். கண்ணம்மாவுக்கு முதல் குழந்தை பிறந்தவுடன் அவன் வெளியே சென்றுவிடுவான்.

அதன்பின், பத்து நிமிடம் கழித்து இரண்டாவது குழந்தையின் பிரசவத்தை வெண்பா வந்து பார்த்து இருப்பாள். ஆனால், அப்போது சௌந்தர்யா இரட்டை குழந்தைகளில் ஒரு பெண் குழந்தையை அவள் வீட்டுக்கு எடுத்துச்சென்று இருப்பாள். பாரதிக்கும் கண்ணமாவிற்கும் இரண்டாவது பெண் குழந்தையைப் பற்றி தெரியாது.

அதன்பின், கண்ணம்மா தன்னிடம் இருக்கும் குழந்தையை எட்டாண்டு காலம் தனி பெண்ணாக மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்து வருகிறார். சந்தர்ப்ப சூழ்நிலையால் தனது புகுந்த வீட்டு மனிதர்களை மீண்டும் சந்திக்கிறாள். அவர்கள் வீட்டில் வளரக்கூடிய குழந்தையும் தனது மகள் தான் என்ற உண்மை கண்ணம்மாவிற்கு தெரியவருகிறது.

bharathi-kannamma-cinemapettai1
bharathi-kannamma-cinemapettai1

அதன்பிறகு தற்போது கண்ணம்மா தனது மகளை தன்னிடம் அனுப்பும்படி மாமியாரிடம் சண்டை போடுகிறாள். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார் சௌந்தர்யா. இருவருக்கும் கருத்து வேறுபாடு எழுந்து, ஒரு முடிவுக்கு வருகிறார்கள். நான்கு நாட்கள் கெடுவில் சிக்குகிறாள் சௌந்தர்யா. நான்கு நாட்களில் பாரதிக்கு உண்மையை சொல்லி புரிய வைத்து உன் மகளை உன்னிடம் அனுப்புகிறேன் என்று கண்ணம்மாவிற்கு வாக்குக் கொடுக்கிறார் சௌந்தர்யா.

இந்த சீரியலை பார்க்கும் ரசிகர்கள், நான்கே நாட்களில் கண்ணம்மாவிற்கு மறைத்தது வைக்கப் பட்ட உண்மைகள் எல்லாம் தெரிய வந்துள்ளதை கண்டு வியப்பில் ஆழ்ந்துள்ளனர். ஒரு வேலை சீரியல் முடியப் போகிறதோ? என்றும் ரசிகர்கள் குழம்பினர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்