ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

பாரதியுடன் சேர்ந்து வாழ நினைக்கும் கண்ணம்மா.. வெண்பாவை விட விஷமாக மாறிய தாய்

பாரதி கண்ணம்மாவில் வெண்பாவை வெறுப்பேற்றிய சந்தோஷத்துடன் வீட்டிற்கு வருகிறார் கண்ணம்மா. அப்போது தன் இரு குழந்தைகளுடன் கண்ணம்மா சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோவை பிரிண்ட் போட்டு கடைக்காரர் எடுத்து வருகிறார்.

போட்டோவை சந்தோஷத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார் கண்ணம்மா. அந்த சமயத்தில் அஞ்சலியின் தாய், கண்ணம்மாவை காண வீட்டிற்கு வருகிறார். அவரை வரவேற்று பேசுகிறார் கண்ணம்மா.

அப்பொழுது அஞ்சலியின் தாய் பாரதியை விவாகரத்து செய்யுமாறு கண்ணம்மாவிடம் கூறுகிறார். மேலும் பாரதியை விவாகரத்து செய்தால் நிறைய பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறுகிறார்.

அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம் என்கிறார். அவரின் இந்த பேச்சை கேட்டு கடுப்பான கண்ணம்மா தன் சித்தியை திட்டுகிறார். நான் உன் நல்லதுக்கு தான் சொன்னேன் என்று அவர் சொல்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த கண்ணம்மா நீங்க எப்போ எனக்கு நல்லது செய்தீங்க என்கிறார். மேலும் பாரதி தான் என் கணவன், என் கடைசி நாள் வரைக்கும் அவர் கட்டிய தாலி என் கழுத்தில் இருக்கும் என்று சொல்கிறார்.

இதனால் அஞ்சலியின் தாய் பேச முடியாமல் வாயடைத்து நிற்கிறார். விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று இந்த காட்சிகள் ஒளிபரப்பாக இருக்கின்றன. பாரதியின் மேல் கோபமாக இருந்த கண்ணம்மா சமீப காலமாக சிறிது மனமிரங்கி அவருடன் வாழ நினைக்கிறார் என்பது போல கதை நகர்ந்து வருகிறது.

bharathi-kannnama-twist
bharathi-kannnama-twist
- Advertisement -

Trending News