கடந்த சில நாட்களாகவே பாரதி கண்ணம்மா ஹீரோயின் ரோஷினி சீரியலை விட்டு விலகும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் வருத்தத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு சற்று முன் வெளியான பாரதிகண்ணம்மா ப்ரோமோ சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது.
கண்ணம்மாவின் வீட்டிற்கு வரும் பாரதி தன் குழந்தை ஹேமாவை தன்னிடமிருந்து பிரிக்க வேண்டாம் என்று கண்ணம்மாவிடம் கெஞ்சுகிறார். அப்பொழுது தன்னுடைய செல்போனை கண்ணம்மா வீட்டிலேயே மறந்து விட்டு செல்கிறார்.
அந்த நேரம் வெண்பா, பாரதிக்கு போன் செய்கிறார். பாரதியின் போனை பார்த்த கண்ணம்மா வெண்பா பெயரை பார்த்ததும் போனை அட்டென்ட் செய்கிறார். கண்ணம்மாவின் குரலைக் கேட்டு அதிர்ந்த வெண்பா, பாரதி போன் உன்கிட்ட எப்படி என்று கேட்கிறார்.
புருஷன் போன் பொண்டாட்டி கிட்ட தான் இருக்கும் என்று நக்கலாக பதிலளிக்கிறார் கண்ணம்மா. இதனால் கடுப்பான வெண்பா என்ன நடக்குது இங்க என்று தனியாக புலம்பிக் கொண்டிருக்கிறார்.
பிறகு பாரதியின் வீட்டிற்கு வரும் வெண்பா அங்கு கண்ணம்மாவை கண்டதும் அதிர்ச்சியாகிறார். உடனே கண்ணம்மா, பாரதியிடம் உங்க பிரண்டு வந்து இருக்காங்க வாங்கன்னு கூப்பிடுங்க என்று உரிமையாக சொல்கிறார். இதைக் கேட்ட பாரதி திருடனுக்கு தேள் கொட்டியது போல முழிக்கிறார்.
கண்ணம்மாவின் இந்த அதிரடியை பார்த்த ரசிகர்கள் குஷி ஆகி உள்ளனர். மேலும் ரோஷினி சீரியலை விட்டு விலக வேண்டாம் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.