திரும்பவும் முதலில் இருந்தா?. பாரதி கண்ணம்மாவை இழுத்தடிக்கும் இயக்குனர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடர் தற்போது கிளைமாக்ஸ் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இத்தொடரை சட்டுபுட்டு என்று முடிக்காமல் ஜவ்வாக இயக்குனர் இழுத்து அடித்து வருகிறார். அதாவது பாரதிக்கு தற்போது ஹேமா மற்றும் லட்சுமி என தன்னுடைய குழந்தை என்பது தெரியவந்துள்ளது.

ஆனால் கண்ணம்மாவுக்கு பாரதியை ஏற்றுக் கொள்ள மனம் இருந்தாலும் குழந்தைகள் செல்ல மறுக்கிறார்கள். தன்னுடைய அம்மாவை தவறாக பேசிய யாரிடமும் நாங்கள் பேச தயாராக இல்லை என கூறினார்கள். இப்போது கண்ணமாவை அழைத்து வரவேண்டும் என பாரதி தனது குடும்பத்துடன் செல்கிறார்.

Also Read : பிக்பாஸ் ஓட்டில் நடந்த குளறுபடி.. அநியாயமாக வெளியேறும் போட்டியாளர்

ஆனால் ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் யாருக்கும் தெரியாத இடத்திற்கு நாம் போய் விடுவோம் என்று கண்ணம்மாவிடம் கேட்கின்றனர். இவர்கள் பஸ்ஸில் யாருக்கும் தெரியாத இடத்திற்கு செல்கிறார்கள். இவர்கள் இணைந்து விடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் டுவிஸ்ட் ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் தான் இப்படி இழுத்தீர்கள் என்றால் திரும்பவும் முதலில் இருந்தா என ரசிகர்கள் உச்சக்கட்ட டென்ஷன் ஆகி உள்ளனர். மேலும் இத்தொடரில் பிக் பாஸ் தாமரை என்ட்ரி கொடுக்க உள்ளார். இதனால் இந்தத் தொடரில் பல திருப்பங்கள் வர காத்திருக்கிறது.

Also Read : ராம் பிக் பாஸில் வாங்கிய சம்பளம்.. ரகுவரன் கெட்டபுக்காகவே வாரி வழங்கிய விஜய் டிவி

மேலும் இத்தொடரில் வெண்பாவை தற்போது போலீஸ் கைது செய்துள்ளனர். அவராலும் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு ஒவ்வொரு பிரச்சினையை கடந்து பாரதி கண்ணம்மா தொடர் முடிய எப்படியும் ஒரு மாத காலமாவது இழுத்தடிப்பார்கள் என்று பலரும் கூறி வருகின்றனர்.

கிளைமேக்ஸ் காட்சியிலாவது பாரதி, கண்ணம்மா இருவரும் இணைவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டும் இன்றி பாரதி கண்ணம்மா தொடரின் இரண்டாம் பாகமும் வர உள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் இப்படி ஒரு இழுவையான சீரியலை இதுவரை பார்த்ததே இல்லை என்று ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகிறார்கள்.

Also Read : பரபரப்பாக நடந்த தேர்தல், வெற்றி யாருக்கு?. பாக்கியலட்சுமியில் எதிர்பாராத டுவிஸ்ட்