ஒரு வருஷத்திற்கு வச்சி செய்யப் போகும் பாரதிகண்ணம்மா.. அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிபதி

விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றான பாரதிகண்ணம்மா தற்போது விருவிருப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் கண்ணம்மாவை விட்டு பிரியும் நோக்கத்தில் பாரதி விவாகரத்துப் பெறுவதற்காக நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

ஆனால் நீதிபதியிடம் பாரதி, கண்ணம்மா நடத்தை கெட்டவள் என்பதை சொல்ல தயங்கி அதனை சொல்லாமலே விட்டுவிட்டார். ஏனென்றால் அவ்வாறு சொன்னால் லக்ஷ்மியின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதில் பாரதி உறுதியாக இருந்தார். எனவே பாரதி மற்றும் கண்ணம்மா இருவருக்கும் சரியான புரிதல் இல்லை என்று நீதிபதி பாரதி கேட்ட விவாகரத்தை கொடுக்க மறுத்துவிட்டார்.

அத்துடன் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒரே வீட்டில் ஆறு மாத காலம் வாழவேண்டும் என்றும் விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி அதிரடி தீர்ப்பை உத்தரவிட்ட ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

எனவே இனிவரும் நாட்களில் கண்ணம்மா அவர்களுடைய மாமியார் வீட்டில் சேர்ந்து மீண்டும் வாழ போகின்றார் என்பதை தெரிந்த பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி கண்ணம்மாவின் மகள் லட்சுமிக்கு பாரதி தான் அப்பா என்ற விவரம் இன்று வரை தெரியாத உள்ள நிலையில், அந்த உண்மையை கண்ணம்மாவே லட்சுமியிடம் போட்டு உடைக்க போகிறார்.

மேலும் பாரதி மற்றும் கண்ணம்மா உடன் இரண்டு மகள்களுடன் சேர்ந்து ஒரே வீட்டில் வாழும் இந்த ஆறுமாத காலத்திற்குப் பிறகு, பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் புரிதல் ஏற்பட்டு நிரந்தரமாக சேர்ந்து வாழ்வதற்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்