அவ ரொம்ப தப்பானவ.. நீதிமன்றத்திலேயே பாரதியை கத்தியால் குத்திய கண்ணம்மா

விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா தொடரில் ஹீரோயினாக நடித்த ரோஷினி பட வாய்ப்புகள் கிடைத்ததால் இத்தொடரில் இருந்து விலகிவிட்டார். தற்போது ரோஷினி போலவே இருக்கும் வினுஷா கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நேற்று வினுஷாவின் முதல் நாளிலே கோர்ட் சீன் வைக்கப்பட்டு இருந்தது. பாரதி, கண்ணம்மா இருவருக்கும் விவாகரத்துக்காக கோர்ட் வந்துள்ளார்கள். கோர்ட்டில் விசாரணை தொடங்கியபோது பாரதி எனக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதி இல்லை என்றும் கண்ணம்மா வருண் என்பவருடன் தொடர்பு வைத்துள்ளார் என்றும் நீதிபதியிடம் பாரதி கூறுகிறார். இவர்களுக்கு பிறந்ததுதான் கண்ணம்மாவின் குழந்தை லட்சுமி என்கிறார்.

பாரதி தன் நடத்தையை பற்றி தப்பாக சொன்னதால் போலீஸிடம் உள்ள கத்தியை எடுத்து பாரதியை கண்ணம்மா குத்துகிறார். சௌந்தர்யா கண்ணம்மா என அலறுகிறார். ஆனால் இது நிச்சயமாக சௌந்தர்யா நினைத்து பார்ப்பது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

இந்த விவாகரத்து சீன் இந்த ஒரு வாரத்தில் முடிவுக்கு வராது. இதை பல எபிசோடுகளாக ஜவ்வாக இழுத்து சீரியலின் இறுதியில்தான் முடிவு தெரியும். ஆனால் பாரதி இறந்து விட்டால் சீரியல் முடிந்து விடும். அதனால் கண்டிப்பாக பாரதி மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு சிகிச்சை பெறுவது போல் காட்சிகள் வரும் வாரங்களில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரதியை கத்தியால் குத்திய கண்ணம்மா

இதனை பார்த்த ஒரு சில ரசிகர்கள் படத்தை விட சீரியல் படுமோசமாக இருக்கிறது எனக் கூறி வருகின்றனர். நாளுக்கு நாள் சீரியலின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் இதற்கும் ஒரு சென்சார்போர்டு வழங்க வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர். ஆனால் விஜய் டிவி அதை எல்லாம் கண்டுக்கொள்ளாமல் டிஆர்பி காக எதையும் செய்யும் என சீரியல் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மற்றொருபுறம் அடுத்த ஒரு வருடத்திற்கு பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் இணைந்து ஒரே வீட்டில் வாழ்வதற்கான வாய்ப்புகளும் உள்ளது.  ஆனால் கடைசிவரை DNA டெஸ்ட் எடுக்காத பாரதி டாக்டருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்