பாரதிகண்ணம்மா சீரியலுக்கு இப்படி ஒரு நிலைமையா.. அடித்து தூள் கிளப்பும் மற்றொரு டிவி

வெள்ளித்திரைக்கு எந்த அளவுக்கு ரசிகர் கூட்டம் இருக்கிறதோ அதே அளவிற்கு சின்னத்திரைக்கும் எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். ஏனென்றால் அனுதினமும் அவரவர் இல்லத்திற்கே சீரியல்களின் மூலம் சந்திப்பதால் ரசிகர்களை வெகுவிரைவில் சின்னத்திரை பிரபலங்கள் கவர்ந்து விடுகின்றனர்.

அத்துடன் இவர்கள் எந்த சீரியலுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து பார்க்கிறார்களோ, அந்த சீரியலின் டிஆர்டி எகிறும் என்பதால் தனியார் தொலைக்காட்சிகளும் சீரியல்களின் விறுவிறுப்பை கூட்டிக் கொண்டே செல்கின்றனர். ஆகையால் இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங்கில் கடந்த சில மாதங்களாகவே சன் டிவியின் கயல் என்ற சீரியல் முதலிடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறது

இந்த சீரியல் துவங்கப்பட்ட நாளிலிருந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைப்பதால் ஒளிபரப்பான சில மாதத்திலேயே டிஆர்பி-யில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து சன்டிவியின் வானத்தைப் போல என்ற சீரியல் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இதில் கதாநாயகன் கதாநாயகி இருவரும் மாற்றப்பட்ட நிலையில் சீரியலின் கதைக்கு என்றே தனி ரசிகர்கள் இருப்பதால் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. மூன்றாம் இடத்தை அதே சன்டிவியின் சுந்தரி என்ற சீரியல் பிடித்துள்ளது.

அத்துடன் 4-வது இடம் தற்போது சின்னத்திரையில் செம ரொமான்டிக் சீரியலான சன் டிவியின் ரோஜா சீரியல் பிடித்துள்ளது. எனவே தொடர்ந்து நான்கு இடத்தை தக்கவைத்துக் கொண்ட சன் டிவியால், விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியல் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது. பாரதிகண்ணம்மா சீரியலின் கதாநாயகி மாற்றப்பட்டாலும், அதன் பிறகு புது கதாநாயகியை ரசிகர்கள் ஏற்றுக் கொண்ட நிலையில் சென்ற வாரம் டிஆர்பி-யில் முன்னிலை வகித்த பாரதிகண்ணம்மா இந்த வாரம் ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. ஆறாவது இடம் சன்டிவியின் கண்ணான கண்ணே என்ற சீரியல் பெற்றுள்ளது.

அதைப்போல் ஏழாவது இடம் விஜய் டிவியின் கூட்டுக்குடும்ப சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் பெற்றுள்ளது. மேலும் எட்டாமிடம் டிஆர்பி-யில் டாப் லிஸ்டில் இருக்கும் பாக்கியலட்சுமி கிடைத்துள்ளது. 9வது இடம் அபியும் நானும் என்ற சீரியலுக்கும், பத்தாவது இடம் தற்போது விஜய் டிவியில் காதல் ட்ராக் ஓடிக்கொண்டிருக்கும் ராஜா ராணி சீரியல் பெற்றுள்ளது.

11வது இடம் அன்பே சிவம் என்ற சீரியலுக்கும், 12வது இடம் தமிழும் சரஸ்வதி என்ற சீரியலுக்கும் கிடைத்துள்ளது. இவ்வாறு சின்னத்திரை சீரியல்கள் அனைத்தும் டிஆர்பியை தக்கவைத்துக்கொள்ள ஒவ்வொரு வாரமும் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. எனவே அடுத்த வாரம் இந்த சீரியல்களுக்கு இதே நிலைமை நீடிக்கும் போது மாற்றங்கள் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்