எந்த கேரக்டரா இருந்தாலும் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணனும்.. சினிமாவை வெறுத்த பாரதி கண்ணம்மா நடிகை

ஒரு பெண் நடிக்க வந்து விட்டாலே கட்டாயம் சில அட்ஜஸ்ட்மென்ட்டுகளுக்கு சம்மதித்து தான் ஆக வேண்டும் என்பது திரை உலகில் எழுதப்படாத விதியாக இருக்கிறது. அந்த காலத்தில் இருந்து இப்போது வரை இந்த பிரச்சனையை பல நடிகைகளும் எதிர் கொண்டு வருகிறார்கள். இது குறித்து பிரபல சீரியல் நடிகை ஒருவர் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

விஜய் டிவியில் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா. பல வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் சமீபத்தில் தான் முடிவடைந்தது. அதை தொடர்ந்து சில நாட்கள் இடைவெளியிலேயே அதன் இரண்டாம் பாகமும் தொடங்கி தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் மது என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ரேஷ்மா பிரசாத்.

Also read: ஞானத்திடம் கெஞ்சி கூத்தாடிய குணசேகரன்.. ஆம்பளைங்களே இல்லையா என அசிங்கப்படுத்திய மருமகள்

யூடியூபின் பிரபல சேனல் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமான இவர் சினிமா வாய்ப்புகளுக்காக முயற்சி செய்தபோது பல அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர்களை அனுபவித்திருக்கிறார். அதிலும் சிறு கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு கூட அட்ஜஸ்ட்மென்ட் செய்தே ஆக வேண்டும் என்ற கண்டிஷனும் போடப்பட்டிருக்கிறது.

அது குறித்து ஒரு பேட்டியில் பேசிய அவர் கேரக்டர் ரோல் உட்பட எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசிவிட்டு தான் கமிட் செய்கிறார்கள். நான் ஒரு ஆடிஷனுக்கு போன போது கூட என்னிடம் இது குறித்து முகத்திற்கு நேராக பேசினார்கள். ஆனால் நான் அதற்கு முடியாது என்று கூறிவிட்டேன். அதனால் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Also read: குணசேகரன் பொண்டாட்டிக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சியை கிளப்பிய வைரல் புகைப்படம்

மேலும் அடுத்தடுத்த வாய்ப்புகளும் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் கிடைக்கும் என்ற நிலைமையும் இருந்தது. அதனால் நான் ஆடிஷனுக்கு செல்வதையே விட்டு விட்டேன். வாய்ப்பு கிடைக்கும்போது கிடைக்கட்டும் என்று சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது சீரியலில் நடித்து வரும் அவர் அதன் மூலம் ரசிகர்களின் ஆதரவையும் பெற்றுள்ளார்.

இவர் மட்டுமல்லாமல் எத்தனையோ நடிகைகள் இது போன்ற கசப்பான அனுபவங்களை சந்தித்திருக்கிறார்கள். அது குறித்து சிலர் வெளிப்படையாக கூறினாலும் சம்பந்தப்பட்டவர்களின் பெயரை வெளியிடுவது கிடையாது. ஒரு சில நடிகைகள் மட்டுமே இது போன்ற மனிதர்களின் முகத்திரையை கிழித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகைகள் அனைவரும் தைரியமாக இதை எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

Also read: போலீசையே வார்த்தைகளால் பதம் பார்க்கும் குணசேகரன்.. கொத்தாக சிக்கிய எதிர்நீச்சல் குடும்பம்

Sharing Is Caring:

அதிகம் படித்தவை