டிவி சீரியல் நடிகையும், தொகுப்பாளினியான ஃபரீனா ஆசாத், கிச்சன் கலாட்டா, செலிபிரிட்டி இன்டர்வியூ மற்றும் சினிமா ஸ்பெஷல் போன்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் பிரபலமாகி வருகிறார்.
மேலும் இவர் தற்போது விஜய் டிவியின் டிஆர்பி-யில் டாப்பில் இருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ என்ற சீரியலில் வில்லியாகவும் தனது அசத்தலான நடிப்பினால் ரசிகர்களை தன் வசப்படுத்தி வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் சமூக ஊடகங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் ஃபரீனா, சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் ஃபரீனாவின் கணவன் புகைப்படத்தை கேட்பதற்கு இணங்க, தன்னுடைய கணவர் ரஹ்மானுடன் சமீபத்தில் எடுத்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தில் ஃபரீனா மற்றும் அவருடைய கணவர் ரஹ்மான் இருவரும் ரொம்பவே க்யூட்டாக காட்சியளிக்கின்றனர். மேலும் சிலர் ஃபரீனாவுக்கு கல்யாணம் ஆயிருச்சா என்ற அதிர்ச்சியிலும் உறைந்துள்ளனர்.
மேலும் ஃபரீனா, 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 20-ஆம் தேதி நீண்ட நாட்களாக காதலித்த ரஹ்மானை திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் ஃபரீனா கல்யாணம் ஆனவர் என்ற விஷயம் பெரும்பாலானோருக்கு அதிர்ச்சியை தான் அளிக்கும்.
ஏனென்றால் எந்த நிகழ்ச்சியிலும் அவர் தனது கணவரை பற்றி பகிர்ந்து கொள்ளமாட்டார். எனவே இத்தகைய தகவல் அனைத்தும் பரிமளாவின் ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது