கண்ணம்மாக்கு பாரதி போட்ட கண்டிஷன்.. கோபத்தில் கொந்தளிக்கும் சௌந்தர்யா

விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலான பாரதிகண்ணம்மா சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்த காட்சிகள் அனைத்தும் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் இந்த சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் பிரிந்து வாழும் நிலையில் இவர்கள் இருவரும் எப்போது சேர்ந்து வாழ்வார்கள் என ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருந்தனர்.

அஞ்சலி-அகிலன் இருவரின் குழந்தைக்கு ஆதவன் என்ற பெயர் சூட்டு விழாவும், பாரதி மற்றும் கண்ணம்மா இருவரின் திருமண விழாவும், அது மட்டுமின்றி வீட்டில் விசேஷ பூஜையும் நடத்தப்படுவதால் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் கைகோர்த்தபடி சௌந்தர்யா வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கு இவர்கள் இருவரும் அன்னியோன்னியமாக பேசிப் பழகிக் கொள்வது வீட்டில் இருப்போருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதுடன் பேரின்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஆனால் தற்போது பாரதி, கண்ணம்மாவை ஏற்றுக்கொள்ள தயாராகிவிட்டார். இந்த எட்டு வருடங்களில் நமக்கு இடையே நடந்த சம்பவங்களை மறந்து இரண்டு பிள்ளைகளுக்காக மீண்டும் சேர்ந்து வாழலாம். ஆனால் ஒரு கண்டிஷன் என்று பாரதி, கண்ணம்மாவிற்கு செக் வைக்கிறார்.

இதற்கு கண்ணம்மா, ‘வாழ்நாள் முழுவதும் தனித்து வாழ போகிறேன் என்ற முடிவில் இருந்தேன். உங்களுடைய இந்த திடீர் மாறுதலுக்கு நீங்கள் என்ன கண்டிஷன் சொன்னாலும் நான் ஏற்றுக் கொள்கிறேன்’ என்று கண்ணம்மா பாரதியிடம் சொல்கிறார். அந்த கண்டிஷன் வில்லன் தரமானதாக இருக்கும் என்பதை யாரும் உணரவில்லை.

ஏனென்றால் கண்ணம்மாவின் குழந்தை எனக்கு பிறக்கவில்லை என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும் என்ற கண்டிஷனை தான் பாரதி முன் வைக்கப் போகிறார். அதன் பிறகு சௌந்தர்யா மற்றும் கண்ணம்மாவின் அப்பா இருவரும் கொந்தளித்து பாரதியை சரமாரியாக திட்டித் தீர்க்க உள்ளனர். கண்ணம்மாவும் பாரதியை மீண்டும் அடியோடு வெறுக்கத் தொடங்குவார்.

எனவே இந்த ஐந்து நாட்களாக பாரதிகண்ணம்மா சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்த சந்தோஷமான காட்சிகள் ஒளிபரப்பான நிலையில் மீண்டும் பழைய ட்ராக் அடுத்த வாரம் துவங்க போகிறதா என்று ரசிகர்கள் சளிப்படைந்துள்ளனர்.

அத்துடன் கண்ணம்மாவின் குழந்தைகளுக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் இந்த பிரச்சனை ஈசியாக முடிந்துவிடும் என்பது சீரியலை பார்ப்போரின் புலம்பலாக உள்ளது.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை