திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

பாண்டியன் ஸ்டோரில் க்லோஸ் பண்ணிட்டாங்க.. பாக்கியலட்சுமி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபலம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் லக்ஷ்மி அம்மாள் என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷீலா. இந்த சீரியலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவருடைய கதாபாத்திரம் இறந்தது போல் காண்பிக்கப்பட்டது.

இறப்பு சம்பந்தமான காட்சியில் ஷீலாவின் நடிப்பு பலருடைய பாராட்டையும் பெற்றது. மேலும் அவரை மிஸ் செய்வதாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த நடிகர்கள் மட்டுமின்றி ரசிகர்கள் பலரும் கூறினர். அதற்கு பதிலளித்த ஷீலா மீண்டும் விஜய் டிவியில் நடிக்க இருப்பதாக கூறினார்.

தற்போது ஷீலா, பாக்கியலட்சுமி சீரியலில் வரும் ராதிகா கேரக்டருக்கு அம்மாவாக நடிக்க உள்ளார். இதற்கான புரோமோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

baakiyalakshmi
baakiyalakshmi

அதில் ஷீலா ராதிகாவிடம், நண்பராக இருந்தாலும் ஒரு ஆண் இரவு நேரத்தில் வீட்டிற்கு வருவது சரியில்லை என்று கோபியை பற்றி கூறுகிறார். ஏற்கனவே கோபியின் தந்தை, கோபியிடம் ராதிகாவுடன் பழகுவதை நிறுத்துமாறு கூறி வருகிறார்.

இந்நிலையில் ராதிகாவின் அம்மா கதையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஷீலாவின் இந்த என்ட்ரி ரசிகர்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

Trending News