மட்டமான கதையை வைத்து உருட்டும் பாக்கியலட்சுமி.. பார்க்கவே கன்றாவியா இருக்கும் ராதிகாவின் செயல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி தொடர் ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும் தற்போது போறப்போக்கே சரியில்லை. முதலில் குடும்பங்கள் பார்த்து ரசிக்கும் படியாக இருந்த இந்த சீரியல் தற்போது குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க முடியாத அளவிற்கு ஒவ்வொரு அட்டூழியத்தின் உச்சக்கட்டமாக கதை நகர்ந்து வருகிறது.

கோபியின் மகன்களுக்கு கல்யாணம் ஆகி இருந்த நிலையில் இவர் வேறொரு திருமணத்தை செய்து கொண்டு அவரை அதே வீட்டில் தங்க வைத்துக்கொண்டு அழிச்சாட்டியம் செய்து வந்தார். அதிலும் பாக்கியாவை அருவருப்பாக பார்த்த கோபி, ராதிகாவை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு அவருக்கு பயந்து இருக்கிற மாதிரி காட்சி எல்லாம் இவர்கள் மகன்கள் பார்த்து சுவரில் முட்டிக் கொண்டார்கள்.

Also read: கதிரை கதற கதற வச்சு செய்த நந்தினி.. ஜீவானந்தம் மாஸ் என்ட்ரியால் குணசேகரனுக்கு ஆப்பு

அதற்கடுத்து தற்போது ராதிகா அளவுக்கு மீறி கோபியை தன் வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று செய்யும் ஒவ்வொரு செயலும் பார்க்கவே கன்றாவியா இருக்கிறது. கோபி எப்படி அவருடைய பொண்ணு இனியா மேல் பாசம் வைக்கலாம் என்று பொறாமையில் ராதிகா அவருடைய மகளை அதே வீட்டில் கூட்டிட்டு வந்து விடுகிறார்.

நாடகத்தை எப்படி இன்னும் விறுவிறுப்பாக கொண்டு போக வேண்டும் என்று தெரியவில்லை என்றால் தயவு செய்து எண்டு கார்டு போட்டு விடுங்கள். அதை தவிர்த்து சின்ன குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்கும் விதமாக மட்டமான கதையை கொண்டு போகாதீர்கள் என்று பார்ப்பவர்கள் அவர்களுடைய ஆதங்கத்தை கொட்டி வருகிறார்கள்.

Also read: கதிரும் தனமும் திருந்தவே மாட்டாங்க போல.. கண்ணன் ஐஸ்வர்யா உருப்பட வாய்ப்பே இல்லை

கோபி அவருடைய பெண்ணை இனியாவை ஸ்கூலில் கொண்டு போய் விடுவதை பொறுக்க முடியாமல் அதை கெடுக்கும் விதமாக மயூரியை ஸ்கூலில் கொண்டு போய் விடுங்கள் என்று சொல்கிறார் ராதிகா. இதனால் பெரிய பஞ்சாயத்திற்கு பிறகு இனியவை எழில் கொண்டு போய் விடுகிறார். இதை பார்த்து அதிக அளவில் கோபப்பட்ட ஈஸ்வரி ராதிகாவை கழுத்தை பிடித்து வெளியே தள்ளி விடுகிறார்.

பின்பு இவர்களுக்கு செக் வைக்கும் விதமாக ராதிகாவின் அம்மா போலீஸிடம் கம்ப்ளைன்ட் கொடுத்து அவர்களை கூட்டிட்டு வருகிறார்கள். போலீசும் ராதிகாவிற்கு ஆதரவாக பேசி இங்கே இருக்க எல்லா உரிமையும் அவருக்கு இருக்கிறது. யாரும் அதை தடுக்க முடியாது என்று ராதிகாவை உள்ள போக சொல்கிறார். இதற்கடுத்து ராதிகாவும் ரொம்பவே கெத்தாகவும் திமிர் ஆகவும் யாராலும் என்னை ஒன்னும் பண்ண முடியாது என்ற கர்வத்துடன் பாக்யாவை முறைத்துக் கொண்டு உள்ளே போகிறார். இனிமேலும் இந்த மாதிரி ஒரு நாடகத்தை இழுக்காமல் கூடிய விரைவில் சுபம் போட்டு விடுங்கள்.

Also read: யார் அந்த ஜீவானந்தம் கண்டுபிடித்த ஜனனி.. சுக்கு நூறான குணசேகரனின் சொத்து கனவு