விஜய் டிவியில் ரசிகர்கள் ஆதரவுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகும் தொடர் பாக்கியலட்சுமி. இந்த கதையின் நாயகியான பாக்யா கடந்த வாரம் தன் வீட்டிற்கு அருகில் உள்ள இல்லத்தரசிகளை இணைத்துக் கொண்டு ஒரு பெரிய சமையல் ஆர்டரை வெற்றிகரமாக செய்து முடிப்பது போல் காட்டப்பட்டது. இந்தக் காட்சி மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்த வார எபிசோட் காண காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது அதில் தான் செய்து முடித்த ஆர்டர்காக மூன்று லட்ச ரூபாய் சம்பளம் பெறுகிறார் பாக்கியா. இதனால் மகிழ்ச்சியடைந்த அவர் தன் மகனிடம் நான் வாழ்க்கையில் இவ்வளவு பணத்தை மொத்தமாக பார்த்ததில்லை என்று கூறுகிறார்.
நாளை பேங்கிற்கு சென்று அந்த பணத்தை எடுத்து வந்து தனக்கு உதவி செய்த பெண்கள் அனைவருக்கும் தர வேண்டும் என்கிறார் . அப்பொழுது பாக்யாவிற்கு வரும் ஒரு போன் காலில் உங்கள் அக்கவுண்டில் இருந்து பணம் எடுக்க முடியாது உங்கள் ஏடிஎம் கார்டு பிளாக் செய்யப்பட்டுவிட்டது என்று ஒருவர் கூறுகிறார்.
இதனால் அதிர்ந்த பாக்கியா அவர் கேட்கும் ஏடிஎம் கார்டு காண விவரங்களை அளித்து விடுகிறார். மறுநாள் வங்கிக்கு சென்று பணத்தை எடுக்க முயலும் பொழுது அங்கே அவரது அக்கவுண்டில் பணம் இல்லை என்று கூறுகிறார்கள். இதனால் பாக்யா அதிர்ச்சி அடைகிறார். இவ்வாறு ப்ரோமோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதை கண்ட ரசிகர்கள் பாக்யா முன்னேறுவது கோபியை விட இயக்குனருக்கு தான் பிடிக்கல போல என்றும், போன வாரம் கெத்தாக இருந்த பாக்யா இந்த வாரம் நொந்து போயிட்டியே என்று ஜாலியாக பதிவிட்டு வருகின்றனர்.
சமீப கால கட்டங்களில் இது போன்ற பிரச்சனைகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இந்த ப்ரோமோ ஒரு வகையில் மக்களுக்கு விழிப்புணர்வை தரும் வகையில் உள்ளது பாராட்டுதலுக்குரியது.