ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

பிரச்சினையே சமாளிக்க முடியாமல் திணறும் பாக்கியா, குளிர் காயும் கோபி.. கமுக்கமாக ஒதுங்கி போகும் வாரிசு

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா ஹோட்டல் பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் ஜெனி, செழியனுக்கு போன் பண்ணி அத்தைக்கு உதவி பண்ணும் விதமாக சேர்த்து வைத்த பணத்தை எடுத்துக் கொடுக்க சொல்கிறார். ஆனால் அப்பொழுது ஆபீஸ்ல இருந்து செழியனுக்கு வேலை போய்விட்டது என்று வெளியே போக சொல்கிறார்கள்.

இதனால் செழியன் வேலை போன சோகத்தில் கோபியை பார்த்து பேச போகிறார். கோபியை பார்த்ததும் அழுது புலம்பி நடந்த விஷயத்தை சொல்லி நான் இதை எப்படி சமாளித்து குடும்பத்தை பார்த்துக் கொள்ளப் போகிறேன். அம்மா வேற ஹோட்டல் பிரச்சனையில் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார். என்னால் உதவ முடியாமல் போய்விட்டது என்று புலம்புகிறார்.

உடனே கோபி, செழியினை ஆறுதல் படுத்தும் விதமாக நீ எதை நினைத்தும் கவலைப்படாதே நான் உன் கூட பக்கத்திலேயே இருப்பேன். உனக்கு கூடிய சீக்கிரத்தில் நல்ல வேலை கிடைக்கும் நீ தைரியமாக இரு என்று அட்வைஸ் பண்ணி வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார். இதற்கு இடையில் ஈஸ்வரி எல்லா பிரச்சனைக்கும் நான் தான் காரணம் நான் ஒரு அதிர்ஷ்டம் இல்லாதவள் என புலம்பி ரூவுக்குள்ளே அடைந்து இருக்கிறார்.

மாமியாரை சமாதானப்படுத்தும் விதமாக பாக்கியா சாப்பாடு எடுத்துக் கொடுக்கிறார். ஆனால் ஈஸ்வரி அதை உதாசீனப்படுத்தும் விதமாக எனக்கு வேண்டாம் மனசு சரியில்லை என்று மறுத்து விடுகிறார். இதை பார்த்த செல்வி அக்கா, உனக்கு ஏகப்பட்ட பிரச்சனை இருக்கிறது. இந்த நேரத்தில் கூட உன் மாமியார் வீம்பு பிடித்து இருப்பது எப்படி சரியாக இருக்கும் என்று சொல்கிறார்.

உடனே பாக்யா, அவங்க மனநிலை இப்பொழுது சரியில்லை அதனால்தான் இப்படி நடந்து கொள்கிறார். நான் பார்த்துக் கொள்கிறேன் நீ அதை பற்றி பேச வேண்டாம் என்று சொல்லி வாய் அடைக்கிறார். இதை பார்த்துக் கொண்டிருந்த ஜெனி, என்னுடைய நகையை நான் தருகிறேன். அதை வைத்து பணத்தை ஏற்பாடு பண்ணி கடனை அடைத்து விடலாம் பிரச்சனையும் சமாளித்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்.

ஆனால் பாக்கியா அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். ஏற்கனவே நீ இங்க வந்ததிலிருந்து சந்தோசமாக இல்லை என்று உன் வீட்டில் இருப்பவர்கள் சொல்கிறார்கள். இந்த சமயத்தில் உன் நகையே வாங்கி விட்டால் அது தேவையில்லாத சங்கடமாகிவிடும் என்று ஜெனி இடம் சொல்கிறார். அந்த நேரத்தில் செழியன் வீட்டிற்கு சோகமாக வருகிறார். ஆனால் வேலை போன விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் மாடிக்கு போய்விடுகிறார்.

செழியன் ஏதோ சங்கடத்தில் இருக்கிறார் என்று பாக்யா புரிந்துகொண்டு ஜெனி இடம் நீ போய் என்ன என்று பார்த்து ஆறுதல் சொல் என அனுப்பி வைக்கிறார். ஆனால் தற்போது அம்மா படும் கஷ்டத்திலும் ஏற்பட்ட பிரச்சனையிலும் சரி செய்ய முடியாமல் செழியன் கமுக்கமாக வேடிக்கை மட்டும் பார்க்கப் போகிறார். ஆனால் இவர் சேர்த்து வைத்திருக்கும் பணத்திலிருந்து பாக்யாவிற்கு உதவி பண்ணலாம். ஆனால் அதற்கு மனமில்லாமல் சுயநலமாக இருக்கிறார்.

இவருக்கு அடுத்ததாக எழில், கையில் பணம் இல்லை அம்மா படும் கஷ்டத்தை என்னால் பார்க்கவும் முடியவில்லை நான் இருப்பதே வேஸ்ட் என்று அமிர்தாவிடம் புலம்புகிறார். அதற்கு அமிர்தா நம்மிடம் பணம் இருந்து நாம் உதவ முடியாமல் இல்லை. நம்மிடம் இருந்தால் நாம் நிச்சயம் அத்தைக்கு உதவி பண்ணி இருக்கலாம். நீங்கள் இதை நினைத்து பீல் பண்ண வேண்டாம் என்று ஆறுதல் சொல்கிறார்.

ஆனாலும் அம்மாவின் பிரச்சினையை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று எழில் தயாரிப்பாளரை சந்தித்து பேசி வாய்ப்புக்காக போராடுகிறார். ஆனாலும் இப்படியும் எழிலால் அதற்குள் சான்ஸ் கிடைத்து பணத்தை ஏற்பாடு பண்ணி பாக்யாவுக்கு உதவ முடியாது. ஆனால் பிள்ளைகளை நம்பாமல் எப்படியாவது இந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்று பாக்யா ஒரு முடிவு எடுக்கப் போகிறார். அந்த வகையில் கடன் பிரச்சனையை சமாளித்து கோபி மூஞ்சில் கரியை பூச போகிறார்.

- Advertisement -

Trending News