சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

ராதிகாவின் மகளிடம் அன்பைப் பொழியும் பாக்கியா.. ஒவ்வொரு நாளும் டார்ச்சரை அனுபவிக்கும் கோபி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி தொடரில் கோபியின் நிலைமையை பார்க்கும் பொழுது ஒரு காமெடி நாடகத்தை பார்ப்பது போல் தோன்றுகிறது. இவர் மேல் இருக்கும் கோபத்தை மறந்து விட்டு இவருக்காக பார்க்கும் அளவிற்கு இவருடைய நடிப்பு இருக்கிறது. கோபியை எப்படியாவது அவருடைய குடும்பத்திலிருந்து முழுசாக பிரித்து தன் வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ராதிகா சூழ்ச்சி செய்கிறார்.

அதற்காக இவரின் அம்மாவும் மயூரியை உன் கூடவே வைத்துக் கொள். அப்படியாவது கோபிக்கு உன் மீது அக்கறை வரட்டும் என்று சொல்கிறார். அடுத்து ராதிகாவின் அம்மா மயூரியை கோபி வீட்டிற்கு கூட்டு வந்து விட்டு விடுகிறார். இதை பார்த்த கோபியின் அம்மா வழக்கம்போல் சண்டை போடுகிறார்.

Also read: எம்ஜிஆர் முதல் அம்பி வரை.. பாக்கியலட்சுமி கோபி கலக்கிய விதவித கெட்டப்

ஆனாலும் எதையும் காது கொடுத்து கேட்காத ராதிகா அவருடைய மகளை மாடிக்கு கூட்டிப் போய் விடுகிறார். இதை பார்த்த கோபி, நிம்மதியாக இருக்க விடக்கூடாது என்று ஒவ்வொரு விஷயத்தையும் செய்கிறாள் என்று புலம்பிக்கொள்கிறார். பின்பு வழக்கம் போல் கோபிக்கும் ராதிகாவிற்கும் சண்டை வருகிறது.

இதை பார்த்த ராதிகாவின் மகள் பயந்து போய் தன்னந்தனியாக இருக்கிறாள். மயூரியின் நிலைமையை பார்த்த பாக்கியா பரிதாபப்பட்டு ராதிகாவின் மகளிடம் அன்பு மழையே பொழிந்து அரவணைக்கிறார். அடுத்ததாக இனியாவிற்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் கோபியை கடுப்பேத்தும் விதமாக ராதிகா ஒவ்வொன்றையும் செய்கிறார்.

Also read: கதிரை கதற கதற வச்சு செய்த நந்தினி.. ஜீவானந்தம் மாஸ் என்ட்ரியால் குணசேகரனுக்கு ஆப்பு

ஆனால் கோபி, நான் இனியாவிற்கு பாடம் நடத்துகிறேன் என்னை தொந்தரவு செய்யாதே என்று சொல்கிறார். பிறகு ராதிகா என் பொண்ணு தூங்குகிறாள் லைட் போட்டால் எப்படி தூங்க முடியும் என்று கேட்க அதற்கு கோபி லைட் ஆப் பண்ணிட்டா இனியாவிற்கு நான் எப்படி சொல்லிக் கொடுக்க முடியும். அவருடைய படிப்பு தான் எனக்கு முக்கியம் என்று கூறிவிடுகிறார்.

மேலும் ராதிகா எதுவும் சொல்லாமல் தூங்க ஆரம்பிக்கிறார். ஆனால் அப்பொழுது கூட கோபியை நிம்மதியாக இருக்க விடாமல் டார்ச்சர் செய்கிறார். ராதிகாவிடம் மாட்டிக்கொண்டு ஒவ்வொரு நாளும் கோபி ரண வேதனையில் தவித்து வருகிறார். இதெல்லாம் இவர் தேடிக் கொண்டதுதான் என்றாலும் கோபியை பார்க்கும் போது பாவமாக இருக்கிறது.

Also read: யார் அந்த ஜீவானந்தம் கண்டுபிடித்த ஜனனி.. சுக்கு நூறான குணசேகரனின் சொத்து கனவு

- Advertisement -

Trending News