பாக்யராஜின் முறியடிக்கப்படாத சாதனை.. தமிழ் சினிமா வரலாற்றில் இன்றுவரை எட்டாத மைல்கல்

பாக்யராஜின் பங்கு தமிழ் சினிமாவில் அளப்பரியது. அதாவது நடிகர், சிறப்பு தோற்றம், தயாரிப்பாளர், வசனம், எழுத்தாளர், இசையமைப்பாளர், திரைக்கதை அமைப்பாளர், இயக்குனர், பத்திரிக்கையாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். ஆரம்பத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் துணை இயக்குனராக பணியாற்றி தமிழ் சினிமாவிற்கு பல இயக்குனர்களை பாக்யராஜ் கொடுத்துள்ளார்.

மேலும் தன்னுடைய ஆசானை போற்றும் வகையில் பல மேடைகளில் என்னுடைய குரு பாரதிராஜாவிடம் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன் என வெளிப்படையாக கூறியுள்ளார். இந்நிலையில் பாக்யராஜ் செய்த சாதனை ஒன்றை தற்போது வரை யாராலும் செய்ய முடியாமல் உள்ளதது.

அதாவது சுவரில்லாத சித்திரங்கள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாக்கியராஜ் ஒரு கை ஓசை, மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, விடியும் வரை காத்திரு, அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு, பொய்சாட்சி, டார்லிங் டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு, தாவணி கனவுகள், சின்னவீடு, சுந்தர காண்டம் என பல படங்களை இயக்கியுள்ளார்.

கிட்டத்தட்ட 26 படங்களை பாக்யராஜ் இயக்கியுள்ளார். அதில் 25 படங்களில் அவரே ஹீரோவாக நடித்துள்ளார். பாக்கியராஜ் இயக்கிய சொக்கத்தங்கம் படத்தில் மட்டும் விஜயகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார். அவ்வாறு பாக்யராஜ் ஒரு இயக்குனராகவும், நடிகராகவும் இருபதிற்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி உள்ள சாதனையை தமிழ் சினிமாவில் யாராலும் முறியடிக்க முடியவில்லை.

அதுமட்டுமல்லாமல் வருடத்திற்கு ஒரு ஹிட் படம் கொடுக்கவே நடிகர்கள் தடுமாறி வருகின்றார்கள். ஆனால் பாக்கியராஜ் ஒரே வருடத்திலேயே ஆறு ஹிட் படங்கள் கொடுத்துள்ளார். அதுவும் ஆறு படங்களிலும் இயக்குனராகவும், நடிகராகவும் பாக்யராஜை பணியாற்றியிருந்தார்.

இயக்கம், நடிப்பு என இதில் ஒன்றில் கவனம் செலுத்துவதே மிகப் பெரிய விஷயம். ஆனால் இந்த இரண்டையுமே திறம்பட செய்து பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்துள்ளார். இவ்வாறு பாக்யராஜ் தமிழ் சினிமாவில் எண்ணற்ற சாதனைகள் புரிந்துள்ளார். மேலும் அப்போதைய காலகட்டத்தில் பாக்கியராஜ் படத்திற்கு என்று தன் ரசிகர் கூட்டமே இருந்தது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்