வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

செழியனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணமா.? அதிர்ச்சியில் பாக்கியலட்சுமி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்தொடரில் பாக்கியா காதாபாத்திரம் இல்லத்தரசிகளின் பிரதிபலிப்பாகும். பாக்கியலட்சுமி தொடரில் பாக்யாவுக்கு இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார்.

இதில் மூத்த மகனான செழியன் தன்னுடைய பள்ளிப்பருவம் முதல் படித்த கிறிஸ்துவ மதப் பெண்ணை காதலிக்கிறார். பெரிய நிறுவனத்தில் வேலை பார்க்கும் செழியனின் காதலை ஏற்க மத வேறுபாட்டால் குடும்பத்தில் எதிர்ப்பலை ஏற்படுகிறது. பல போராட்டங்களுக்குப் பிறகு இரு குடும்பத்தினர் சம்மதத்துடன் செழியன், ஜெனி திருமணம் நடைபெற்றது.

ஜெனி பாக்யாவின் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் மிகவும் பாசமாக இருந்தார். ஜெனிக்கு உறுதுணையாக பாக்கியா எப்போதும் இருப்பாள். ஜெனி தன்னுடன் நேரம் செலவிடாமல் தன் குடும்பத்துடன் இருப்பதால் செழியனுக்கு ஜெனி மீது கோபம் ஏற்படுகிறது. இதனால் இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு நடக்கிறது.

ஒருகட்டத்தில் இருவரும் புரிந்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். ஜெனி கர்ப்பமாக இருப்பதால் மொத்த குடும்பமும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் செழியன் தற்போது குழந்தை வேண்டாம் என ஜெனியிடம் கூறுகிறார். ஜெனியிடம் வெறுப்பாக நடக்கும் செழியனின் பாட்டி ஜெனி கருவுற்றால் என தெரிந்தவுடன் மிகவும் அக்கறையாக பார்த்துக் கொள்கிறார்.

எதிர்பாராத விதமாக ஜெனியின் கரு கலைந்தது. இதனால் ஜெனி அவளது அம்மா வீட்டிற்கு செல்கிறாள். ஜெனியின் பிரிவை தாங்க முடியாமல் செழியன் குடித்துவிட்டு ஜெனி வீட்டுக்கு செல்கிறார். அங்கு ஜெனியின் அப்பா ஜோசப், செழியன் இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது. வீட்டிற்கு வந்த செழியனை பாக்கியாவும், எழிலும் மேலே அழைத்து படுக்க வைக்கிறார்கள்.

jeni-bhagkiyalaxmi
jeni-bhagkiyalaxmi

விடிந்தவுடன் செழியன் பாட்டிக்கு விஷயம் தெரிந்து ஜெனியின் அப்பா ஜோசப்க்கு போன் செய்து பேசுகிறார். பேசும்பொழுது சண்டை முற்றி அதிசயமான பெண்ணை பெற்றிருக்கிறீர்கள் உங்க பொண்ண நீங்களே வைத்துக் கொள்ளுங்கள், செழியனுக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வருகிறோம் என்கிறார். இதைக் கேட்ட செழியனும் பாக்கியமும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

- Advertisement -

Trending News