பாக்கியலட்சுமி ஜெனிபருக்கு என்ன குழந்தை தெரியுமா.? அவரே வெளியிட்ட வைரல் புகைப்படம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஜெனிபர். சில நாட்களுக்கு முன்னர் அவர் கர்ப்பமாக இருந்த காரணத்தால் பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகினார்.

அதனால் ஜெனிபர் நடித்து வந்த ராதிகா கதாபாத்திரத்தில் தற்போது பிக்பாஸ் புகழ் ரேஷ்மா நடித்து வருகிறார். அதன்பின்னர் ஜெனிபர் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு விமரிசையாக வளைகாப்பு நடைபெற்றது. அதில் தன் கணவருடன் ஜெனிஃபர் டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தமிழ் சினிமாவின் மூத்த நடன இயக்குனரான சின்னா வின் மகள்தான் இந்த ஜெனிபர். இவர் ஒளிப்பதிவாளர் காசி விஸ்வநாதனை திருமணம் செய்து 15 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது.

தற்போது இரண்டாவது குழந்தைக்கு தாயாகி இருக்கும் ஜெனிபர் இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் விஜய் டிவியில் பாரதி கண்ணம்மாவில் வெண்பாவாக நடித்து வரும் நடிகை பரினாவுக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

jennifer
jennifer
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்