பூதாகரமாக வெடிக்கப் போகும் அமிர்தாவின் பிரச்சனை.. பாக்யா எடுக்கப் போகும் முடிவு என்ன?

Baakhiyalakshmi: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் இப்போது அடுத்தடுத்த பிரச்சனைகளை பாக்யா சந்திக்க இருக்கிறார். கணவனால் ஏமாற்றப்பட்டாலும் இப்போது தான் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதற்காக தனது தொழிலில் முன்னேறி வரும் பாக்யாவுக்கு சோதனை தரும் விஷயங்கள் அரங்கேறி வருகிறது.

அந்த வகையில் அமிர்தாவின் அம்மா வீட்டுக்கு கணேஷ் மற்றும் அவரது பெற்றோர்கள் வந்திருக்கின்றனர். மேலும் கணேஷ் தன்னுடன் தான் அமிர்தா மற்றும் அவரது மகள் நிலா இருக்க வேண்டும் என்று கூறுகிறார். இதைக் கேட்டு அமிர்தாவின் அம்மா நிலைகுலைந்து போகிறார்.

மற்றொருபுறம் தனது மகளின் வாழ்க்கையை கெடுத்து விடாதீர்கள் என்று கணேஷ் மற்றும் அவரது அப்பா, அம்மா இருவரிடமும் கூறுகிறார். ஆனால் கணேஷ் மீண்டும் உயிருடன் வந்துவிட்டார் என்ற விஷயத்தை பாக்யாவிடம் சொல்லிவிட்டதாக கணேஷின் பெற்றோர்கள் கூறுகிறார்கள். இதனால் அமிர்தாவின் அம்மா அதிர்ச்சி அடைகிறார்.

இந்நிலையில் உடனடியாகவே பாக்யா வீட்டிற்கு அமிர்தா அம்மா செல்கிறார். எனது மகளிடம் கணேஷ் உயிரோட திரும்பி இருக்கிறார் என்ற விஷயத்தை சொல்லாமல் வேதனையுடன் மனசுக்குள் வைத்துக் கொண்டு அழுகிறார். இந்த விஷயத்தை சொல்லி என்னுடைய மகளின் வாழ்க்கை உங்கள் கையில் தான் இருக்கிறது என்று கூறிவிட்டு செல்கிறார்.

இவ்வாறு எழிலின் வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் பாக்யா அடுத்ததாக என்ன முடிவு எடுக்க உள்ளார் என்ற எதிர்பார்ப்புடன் இந்த தொடர் சென்று கொண்டிருக்கிறது. மேலும் பாக்யாவின் மூத்த மகன் செழியனும் மாலினியுடன் பழகிய நிலையில் இப்போது வீடு வரைக்கும் மாலினி வர ஆரம்பித்து விட்டார்.

இந்த சூழலில் செழியனின் குழந்தையை மறைத்து வைத்து மாலினி விளையாடி இருந்தார். எல்லோரும் பதறிய நிலையில் மாலினி தான் இந்த காரியம் செய்திருக்கிறார் என்று பாக்யாவுக்கு தெரிந்த உடன் இனி வீட்டுக்கே வரக்கூடாது என கண்டித்து அனுப்பி விடுகிறார். இதனால் செழியனின் வாழ்க்கையிலும் பூகம்பம் வெடிக்க இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்